
Cinema News
எம்.ஜி.ஆரை திட்டினாலும் பாடல் வரிகளை மாற்றி கொடுத்த கண்ணதாசன்!.. செம ஹிட் பாட்டாச்சே!.,.
Published on
By
எம்.ஜி.ஆருக்கு நண்பராக இருந்து பின்னாளில் எதிரியாக மாறியவர்தான் கவிஞர் கண்ணதாசன். எம்.ஜி.ஆர் சினிமாவில் நடிக்க துவங்கிய காலத்தில்தான் கண்ணதாசனும் கதாசிரியராகவும், பாடலாசிரியராகவும் வளர்ந்து வந்தார். எம்.ஜி.ஆரின் சில படங்களுக்கு கதை வசனமும் எழுதி இருக்கிறார்.
எம்.ஜி.ஆர் முதன் முதலாக தயாரித்து, இயக்கி நடித்த நாடோடி மன்னன் படத்திலும் கதை, வசனத்தில் கவிஞர் கண்ணதாசனின் பங்கும் இருந்தது. அதன்பின் எம்.ஜி.ஆரின் பல படங்களுக்கு பாடல்களை எழுதினார். குறிப்பாக எம்.ஜி.ஆருக்கு பல காதல் மற்றும் தத்துவ பாடல்களை கண்ணதாசன் எழுதினார். இருவரும் நல்ல நண்பர்களாகவே இருந்தனர்.
இதையும் படிங்க: கண்ணதாசன் சினிமாவில் பாடல் எழுதுவதற்கு முன்னால் என்ன வேலை செய்தார் தெரியுமா?
ஆனால், அரசியல் காரணமாக இருவரும் பிரிந்தனர். அதாவது எம்.ஜி.ஆர் திமுகவை ஆதரித்தார். கவிஞர் கண்ணதாசனோ காமராஜர் மீது இருந்த அன்பில் காங்கிரஸை ஆதரித்தார். அரசியல் மேடைகளில் ஒருவரை ஒருவர் தாக்கி பேசிக்கொண்டனர். எம்.ஜி.ஆர் மென்மையாகவே பேசினார்.
ஆனால், கண்ணதாசன் எம்.ஜி.ஆரை கடுமையாக விமர்சித்தார். அதோடு, அவர் நடத்தி வந்த பத்திரிக்கையிலும் எம்.ஜி.ஆரை கடுமையாக விமர்சித்து கட்டுரைகளை எழுதி வந்தார். இது எம்.ஜி.ஆர் வருத்தத்தை ஏற்படுத்தியது. ஆனாலும், கண்ணதாசன் தமிழ் மீது இருந்த மதிப்பு காரணமாக அவர் எதிர்வினை ஆற்றவில்லை. அதேநேரம், தனது படங்களுக்கு கண்ணதாசன் பாடல் எழுதவேண்டாம் என நினைத்த எம்.ஜி.ஆர் வாலியை எழுத வைத்தார். ஒருகட்டத்தில் எம்.ஜி.ஆரின் படங்களுக்கு தொடர்ந்து வாலியே பாடல் எழுதி வந்தார். ஆனாலும், அரிதாக எம்.ஜி.ஆருக்கு கண்ணதாசன் பாடல் எழுதும் சூழ்நிலையும் வந்தது.
எம்.ஜி.ஆர் நடிப்பில் 1970ம் வருடம் வெளிவந்த திரைப்படம் மாட்டுக்கார வேலன். இந்த படத்தில் ஒரு பாடல். எம்.ஜி.ஆருக்கு டி.எம்.சவுந்தரராஜனும், லட்சுமிக்கு எல்.ஆர்.ஈஸ்வரியும், ஜெயலலிதாவுக்கு பி.சுசிலாவும் பாடினார்கள். இந்த படத்தில் மாட்டுக்காரனாகவும், வக்கீலாகவும் என இரண்டு வேடங்களில் எம்.ஜி.ஆர் நடித்திருப்பார். எனவே, இருவருக்கும் பொருந்துவது போல பாடல் வரிகளை எழுதி இருந்தார் கண்ணதாசன்.
இதையும் படிங்க: கண்ணதாசன் அழைத்தும் போகாத எம்.எஸ்.வி!… சந்திக்கவே முடியாமல் போன சோகம்!.. அட பாவமே!..
அதுதான் ‘பூ வைத்து பூவைக்கு பூக்கள் சொந்தமா?’ என்கிற இனிமையான பாடல். இதில், நாயகியை பார்த்து வக்கீல் எம்.ஜி.ஆர் பாடும்போது ‘பள்ளிக்கணக்கு கொஞ்சம் சொல்லி பழக்கு.. நீ இல்லையென்றால் நான் தொடுப்பேன் காதல் வழக்கு’ என வரும், அதற்கு பதில் சொல்வது போல நாயகி பாடும்போது ‘போடுங்கள்.. கூண்டில் ஏற்றுங்கள். நான் போதும் என சொல்லும் வரை நீதி சொல்லுங்கள்’ என எழுதி இருந்தார் கண்ணதாசன்.
நாயகி பாடும் வரிகளில் எம்.ஜி.ஆருக்கு திருப்தி இல்லை. எனவே, அந்த வரிகளை மாற்ற சொனனார் எம்.ஜி.ஆர். எனவே, அந்த வரிகளை கொஞ்சம் மாற்றி ‘போடுங்கள்.. கூண்டில் ஏற்றுங்கள்.. உங்கள் பொன் மனத்தை சாட்சி வைத்தது வெற்றி கொள்ளுங்கள்’ என எழுதி கொடுத்தார் கண்ணதாசன். அரசியல்ரீதியாக எம்.ஜி.ஆரை கண்ணதாசன் விமர்சித்தாலும் பாடல் வரிகளில் அவர் என்ன கேட்டாரோ அதை செய்து கொடுத்தார்.
Bison: நடிகர் விக்ரமின் மகனும் நடிகருமான துருவ் விக்ரம் நடிப்பில் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் பைசன். இந்த படம் அக்டோபர்...
Simbu-Dhanush: தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜித் வரிசையில் அடுத்த இரட்டை போட்டியாளர்களாக பார்க்கப்பட்டவர்கள் சிம்புவும் தனுஷும். சிம்பு குழந்தை...
SMS: கடந்த 2009 ஆம் ஆண்டு ராஜேஷ் இயக்கத்தில் வெளியான திரைப்படம்தான் சிவா மனசுல சக்தி. இந்தப் படத்தில் ஜீவா நாயகனாக...
கோமாளி படம் மூலம் இயக்குனராக களமிறங்கி முதல் படத்திலேயே ஹிட் கொடுத்தவர் பிரதீப் ரங்கநாதன். அந்த படத்தின் இறுதியில் ஒரு காட்சியில்...
AK64: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி. அந்த படத்திற்கு முன் அஜித் நடிப்பில்...