×

தை பொங்கலுக்கு நம்ம தளபதி மாஸ்டருடன் போட்டிபோடும் திரைப்படங்கள்

கடந்த தீபாவளிக்கு வெளியிடப்படுவதாக திட்டமிட்டிருந்த மாஸ்டர் கொரோனா பரவல், ஊரடங்கு, சினிமா தியேட்டர் மூடல், படப்பிடிப்பு ரத்து போன்ற காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டு பின் பொங்கலுக்கு வெளியாவது உறுதி செய்யப்பட்டது.

 

8 மாத காலமாக தியேட்டர்களுக்கு படங்கள் இல்லாததால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் மாஸ்டர் போன்ற பெரிய நடிகர்களின் படங்களை எதிர்பார்த்துள்ளனர்.

தற்போதிருக்கும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளால் தியேட்டர்களில் சில படங்கள் வெளியானாலும் எதிர்பார்த்த கூட்டமும் இல்லை, வசூலும் இல்லை. இதனால் அவர்கள் அனைவரும் விஜய்யின் மாஸ்டர் படத்தை எதிர்பார்த்து இருக்கின்றனர்.

ஆனால் மாஸ்டர் படத்தை திரையிடும் திரையரங்குகள் படம் வெளியான நாளிலிருந்து 5 நாட்கள் வேறு எந்த படத்தையும் திரையிடக்கூடாது என மாஸ்டர் தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளதாக அண்மையில் தகவல் வெளியாகின.

மாஸ்டர் படம் வரும் ஜனவரி 13 ம் தேதி ரிலீஸ் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிம்பு நடிப்பில் ஈஸ்வரன் படம் ஜனவரி 14 வெளியாகிறதாம்.

மாஸ்டர் தெலுங்கிலும் வெளியாகவுள்ள நிலையில் ராம் பொத்னேனி நடித்து ரெட், அகில் நடித்துள்ள தி மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர், ரவி தேஜா நடித்துள்ள கிராக் ஆகிய படங்களும் ஜனவரி 14 ல் வெளியாகவுள்ளதாம்.

#Master - Jan 13

#Eeswaran- Jan 14

#Krack- Jan 14

#Red- Jan 14

#MostEligibleBachelor- Jan 14

From around the web

Trending Videos

Tamilnadu News