
Cinema News
நான் கேட்டது அதுதான்!. ஆனா விஜயகாந்த் கொடுத்தது மறக்கவே முடியாது!. உருகும் பொன்னம்பலம்…
Published on
By
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் சண்டை காட்சி நடிகராக நடித்தவர் பொன்னம்பலம். துவக்கத்தில் கும்பலில் ஒருவராக நடித்த பொன்னம்பலம் பின்னாளில் ஹீரோக்களுடன் தனியாக மோதும் நடிகராக மாறினார். இவர் சண்டை காட்சி என்றாலே டெரராக இருக்கும். விஜயகாந்த், சத்தியராஜ், பிரபு, சரத்குமார் போன்ற ஹீரோக்கள் இவருடன் ஒன் டூ ஒன் சண்டை போடுவார்கள். சண்டை காட்சி விரும்பிகளுக்கு அது விருந்தாக இருக்கும்.
இப்படி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல நூறு படங்களில் பொன்னம்பலம் சண்டை காட்சி நடிகராக நடித்துள்ளார். பல திரைப்படங்களில் படத்தின் வில்லனாகவும் நடித்துள்ளார். கடந்த சில வருடங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சிறுநீரகம் செயலிழந்து விட்டதால் திரையுலகினரிடம் உதவி கேட்டார். விஜய், அஜித், கமல் என பலரிடமும் இவர் உதவி கேட்டார்.
இதில் தனுஷ், கமல் இருவரும் அவருக்கு உதவி செய்தனர். ஊடகங்களில் தொடர்ந்து அவர் பேசியும் வருகிறார். அதில் பல விஷயங்களை அவர் பகிர்ந்து வருகிறார்.
ponnambalam
எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் விஜய், விஜயகாந்த் நடித்து 1993ம் வருடம் வெளியான திரைப்படம் செந்தூரபாண்டி. விஜயின் வளர்ச்சிக்காக இப்படத்தில் நடித்து கொடுத்தார் விஜயகாந்த். இந்த படத்தில் பொன்னம்பலம் வில்லனாக நடித்திருப்பார். இந்த படத்தில் நடித்த அனுபவம் பற்றி பேசிய அவர் ‘கால் உடைந்து ஒரு வருடமாக வேலை இல்லாமல் வீட்டில் இருந்தேன். நிறைய கடம் ஆகிவிட்டது. வீட்டில் ஒரே பிரச்சனை. செந்தூர பாண்டி படத்தில் என்னை புக் செய்தனர்.
Senthoorapandi
எஸ்.ஏ.சி அலுவலகத்திற்கு சென்றேன். 50 ஆயிரம் சம்பளமாக கொடுத்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். எஸ்.ஏ.சியிடம் ‘சார் வீட்டில் கஷ்டம் சார்.. நல்ல சம்பளமாக கொடுங்க’ என்று கேட்டேன். அதற்கு அவர் ‘விஜயகாந்த் உனக்கு நல்ல சம்பளம் கொடுக்க சொல்லியிருக்கிறார். அது கவரில் இருக்கிறது. அக்ரிமெண்ட்டும் இருக்கிறது. நீ வீட்டில் போய் பிரித்து பார்’ என்றார். வீட்டில் சென்று பார்த்தேன். ஒரு லட்ச ரூபாப் அட்வான்ஸ் இருந்தது. ஒப்பந்தத்தில் எனது மொத்த சம்பளம் இரண்டு லட்சத்து 75 ஆயிரம் என இருந்தது. அதை வைத்து ஒரு வருடம் ஓட்டி விடலாம்’ என மகிழ்ச்சி அடைந்தேன்’ என பொன்னம்பலம் கூறினார்.
இதையும் படிங்க; குடியால் குடி மூழ்கி போன கார்த்திக் படம்- உண்மையை போட்டுடைத்த தயாரிப்பாளர்!!
விடுதலை 2 திரைப்படத்திற்கு பின் சூர்யாவை வைத்து வாடிவாசல் எடுக்க திட்டமிட்டிருந்தார் வெற்றிமாறன். ஆனால் முழுக்கதையும் ரெடி ஆகாததால் சூர்யா நடிக்க...
Parasakthi: அமரன் படத்திற்கு பின் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நடிக்க தொடங்கினார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மட்டுமில்லாமல்...
STR49: வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க சிம்பு நடிப்பில் ஒரு படம் உருவாகவுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது....
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான குட் பேட் அக்லி சூப்பர் ஹிட் அடித்ததால் அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக்கே...
AK64: ஆதிக் ரவிச்சந்திரன் அடிப்படையில் ஒரு தீவிரமான அஜித் ரசிகர். திரிஷா இல்லனா நயன்தாரா என்கிற திரைப்படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக...