விஜய் படத்தில் அவர்தான் ஹீரோயினாம்!.. தளபதி 65 அப்டேட்..
Mon, 28 Dec 2020

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் தனது 65வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கவுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
இந்நிலையில், இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக தெலுங்கில் நம்பர் நடிகையாக உள்ள பூஜா ஹெக்டே நடிக்கவிருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனக்கூறப்படுகிறது.
சமீப காலமாக தெலுங்கில் பூஜா ஹெக்டே நடித்து வெளியாகும் திரைப்படங்கள் மாபெரும் வெற்றியை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Latest Buzz : @hegdepooja to be the part of #Thalapathy65 ❤️
— Pooja Hegde (@PoojaHegdeFP) December 28, 2020
Wait For The Official Confirmation 👍 pic.twitter.com/wYN0Dwt6WT