Categories: Cinema News latest news

50 வயது நடிகருடன் டேட்டிங்கா? விஜய் பட கதாநாயகியை ரவுண்டு கட்டும் நெட்டிசன்கள்…

மிஷ்கின் இயக்கிய “முகமூடி” திரைப்படத்தின் மூலம் சினிமாத் துறைக்குள் கதாநாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இவர் தமிழில் அறிமுகமானாலும் பின்னாளில் தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் டாப் நடிகையாக வலம் வந்தார். இப்போதும் இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் பூஜா ஹெக்டே.

பீஸ்ட் நாயகி

பூஜா ஹெக்டே “முகமூடி” திரைப்படத்திற்குப் பிறகு தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை. கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு பிறகு அவர் தமிழில் மீண்டும் நடித்த திரைப்படம்தான் “பீஸ்ட்”. இத்திரைப்படத்தில் பூஜா ஹெக்டே அழகு பதுமையாக வலம் வந்து ரசிகர்களை கைக்குள் போட்டுக்கொண்டார்.

“பீஸ்ட்” திரைப்படத்தை தொடர்ந்து தெலுங்கில் “ஆச்சார்யா”, “எஃப் 3”, போன்ற திரைப்படத்தில் நடித்த பூஜா ஹெக்டே, ஹிந்தியில் “சர்க்கஸ்” என்ற திரைப்படத்தில் நடித்தார். “சர்க்கஸ்” திரைப்படத்தை தொடர்ந்து தற்போது அவர் நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் “கிஸி கா பாய் கிஸி கி ஜான்”. இதில் சல்மான் கான் கதாநாயகனாக நடித்துள்ளார். இத்திரைப்படம் தமிழில் 2014 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான “வீரம்” திரைப்படத்தின் ரீமேக் ஆகும்.

கிசுகிசுக்கு முற்றுப்புள்ளி

“கிஸி கா பாய் கிஸி கி ஜான்” திரைப்படம் வருகிற 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை தொடர்ந்து இத்திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது சல்மான் கானுடன் பூஜா ஹெக்டே டேட்டிங் செய்து வந்ததாக ஒரு கிசுகிசு பரவி வந்தது. இந்த நிலையில் தற்போது இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பூஜா ஹெக்டே.

“நான் எப்போதுமே சிங்கிள்தான். வருங்காலத்தில் கூட தனியாக இருக்கத்தான் விரும்புகிறேன். சல்மான் கானுடன் நான் டேட்டிங் செய்வதாக சமூக வலைத்தளங்களில் கிசுகிசு பரவி வருகிறது. ஆனால் இது துளி கூட உண்மை இல்லை” என கூறி பூஜா ஹெக்டே இந்த கிசுகிசுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இதையும் படிங்க: இயக்குனர் செய்த காரியத்தால் ஆயிரம் பேருக்கு முன் அவமானப்பட்ட விஜயகாந்த்…

Arun Prasad
Published by
Arun Prasad