Connect with us

Gossips

அந்த ஆளை நம்பி எல்லாமே நாசமா போச்சு!.. இனிமே வீட்டுல சும்மா பூஜை போட வேண்டியது தான்.. புலம்பும் நடிகை!..

கால் அழகியாக சினிமாவில் வலம் வரும் அந்த பிரபல நடிகைக்கு பட வாய்ப்புகள் டோட்டலாக வராமல் போய் விட்டதால் ஒரே புலம்பலாக புலம்பித் தவித்து வருகிறார். கோலிவுட்டில் தொடங்கிய பயணம் டோலிவுட், பாலிவுட் என சென்ற நிலையில், பாலிவுட்டில் தொடர்ந்து அடி வாங்கிய அந்த நடிகையை தற்போது எந்தவொரு டாப் ஹீரோவும் சீண்டுவது கிடையாதாம்.

காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என பெரிய நடிகர்களின் படங்கள் குவிய எதையுமே யோசிக்காமல் அத்தனைக்கும் ஒப்புக் கொண்டு நடித்த நடிகைக்கு தொடர்ந்து அரை டஜன் படங்கள் ஃபிளாப் ஆன நிலையில், தற்போது ஆள் அட்ரஸே இல்லாமல் காணாமல் போய் விட்டார் என்கின்றனர்.

இதையும் படிங்க: சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது!.. ஓரக்கண்ணால ஓரங்கட்டும் ஸ்ரீதேவி மகள்.. சூப்பர் தரிசனம்!..

இது அனைத்துக்கும் காரணம் நடிகையின் மேனேஜர் தான் என்கின்றனர். சமீபத்தில், தனது மேனேஜரையே அதிரடியாக நடிகை நீக்கி விட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

நல்ல கதைகளை தனக்கு தேர்வு செய்து கொடுக்காமல், ஓடாத படங்களில் ஒப்பந்தம் செய்ய வைத்து கேரியரையே காலி செய்து விட்டான் படுபாவின் என கண்டபடி திட்டி அவரை வீட்டுக்கு அனுப்பி விட்டார் அந்த கால் அழகி என கிசுகிசுக்கத் தொடங்கி உள்ளனர்.

இதையும் படிங்க: மேக்கப் மட்டும் தான் இருக்கு!.. மூஞ்சியையே காணோமே.. பிக் பாஸ் ஜூலியை கலாய்க்கும் ஃபேன்ஸ்!..

மீண்டும் தெலுங்கு சினிமா பக்கம் சான்ஸ் தேடி போகலாம் என பார்த்தால் ஏகப்பட்ட பாலிவுட் நடிகைகள் தற்போது தெலுங்கு சினிமா தான் பெரிய பாக்ஸ் ஆபிஸ் படங்களாக மாறி வருவதை அறிந்து இந்தி நடிகர்களுக்கே டாட்டா காட்டி விட்டு ஹைதராபாத்தில் செட்டில் ஆகி வருவதாக கூறுகின்றனர்.

இந்நிலையில், கொடி கட்டிப் பறந்த இடத்தை விட்டு விட்டு இக்கறைக்கு அக்கறை பச்சை என அகல கால் வைத்து அனைத்தும் வீணாய் போய் விட்டதே என ஃபீல் பண்ணி கதறி வருகிறார் என்கின்றனர்.

author avatar
Saranya M
Continue Reading

More in Gossips

To Top