இந்தியத் திரையுலகையே தனது அழகால் மயக்கி வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. பாகுபலி படத்திலேயே ராஜமாதா கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவியை நடிக்க வைக்கவே முயற்சி செய்ததாக ராஜமௌலியை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அப்படிப்பட்ட பேரழகி ஸ்ரீதேவி மறைந்தாலும் அவரது மகள் ஜான்வி கபூர் அம்மாவின் ஒட்டுமொத்த அழகையும் தனக்குள் தாங்கிக் கொண்டு இந்திய சினிமாவையே ஒரு கலக்கு கலக்கப் போகிறார் எனத் தெரிகிறது.
இதையும் படிங்க: நான் கூப்பிட்டு வரல!.. அம்பானி கூப்பிட்ட உடனே போறியா!.. நயன்தாரா மீது செம கடுப்பில் ஷாருக்கான்!..
பாலிவுட் படங்களில் நடித்து 22 மில்லியன் ரசிகர்களை இன்ஸ்டாகிராமில் ஃபாலோயர்களாக மாற்றிய ஜான்வி கபூர் தற்போது தெலுங்கில் ஜூனியர் என்டிஆர்க்கு ஜோடியாக நடித்து தென்னிந்திய சினிமாவிலும் ஒரு ரவுண்டு வரப்போகிறார் என்பது தெளிவாகியுள்ளது.
ஜான்வி கபூரின் தங்கை குஷி கபூர் நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாக போவதாக விபத்தில் தகவல்கள் வெளியாகி இருந்தன. கோலிவுட்டிலிருந்து கிளம்பி பாலிவுட்டில் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கிய ஸ்ரீதேவியின் மகள்கள் தற்போது பாலிவுட்டிலிருந்து தென்னிந்தியாவிலும் ஆட்சி செய்யும் முடிவுடன் கிளம்பி உள்ளனர்.
இதையும் படிங்க: கோடி கோடியா கல்லா கட்றாங்கப்பா!.. ரிலீசுக்கு முன்பே கோடிகளை குவித்த தனுஷ் 50!..
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு குட்டி உடையிலிருந்து சேலைக்கு மாறிய ஜான்வி கபூர், தொடர்ந்து செலிப்ரேஷன் முறையிலேயே இருந்து வரும் நிலையில், லேட்டஸ்டாக அழகான புடவையை அணிந்து கொண்டு அப்சரஸ் களில் தோற்றுவிடும் அளவுக்கு சாய்ந்து சாய்ந்து பார்த்து இளைஞர்களை சாய்த்து வருகிறார்.
மேலும் ஓரக்கண்ணால் ஓரம் கட்டும் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்து வருகிறார் போனி கபூரின் மகள். நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு, வீட்ல விசேஷம் படங்களை தயாரித்ததை விட ஜான்வி கபூரை தயாரித்து தான் போனி கபூர் தரமான சம்பவத்தை செய்துள்ளார் என ரசிகர்கள் குஷியாகி வருகின்றனர்.