Categories: Cinema News latest news

பிரபல இயக்குனரை கல்யாணம் செய்தாரா சாய் பல்லவி?… வைரலாகும் புகைப்படம்… அடேய்களா!

Sai pallavi: தமிழ் பெண்ணான சாய் பல்லவி தொடர்ச்சியாக பல மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். முன்னணி நாயகர்களுடன் எல்லாம் ஜோடி போட்டு வரும் நிலையில் திடீரென பிரபல இயக்குனரை திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

2015ம் ஆண்டு வெளிவந்த மலையாளப் படமான பிரேமம் மூலம் சாய்பல்லவி நடிகையாக அறிமுகமானார். ப்ரேமம் அந்த நேரத்தில் அதிக வசூல் செய்த இரண்டாவது மலையாளப் படம். மேக்கப் இல்லாத முகம், நீண்ட முடி, அசரடிக்கும் டான்ஸ் என ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்தார். 

இதையும் படிங்க: லியோ படத்தில் விக்ரம்… லோகேஷை பகிரங்கமாக மாட்டி விட்ட கமல்ஹாசன்… இருக்குமோ!

மலையாளம் கொடுத்த வரவேற்பினை அடுத்து தெலுங்கு பக்கம் தலை சாய்த்தார். பிடா படத்தின் பானுமதி கேரக்டர் அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தினை கொடுத்தது. சில படங்களில் நடித்தவருக்கு தமிழில் தியா படத்தின் மூலம் வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

ஆனால் அந்த படம் வசூல் ரீதியாக பெரிய வரவேற்பை பெறவில்லை. மாரி இரண்டாம் பாகத்தில் தனுஷுடன் ஜோடி போட்டார். அதில் நடிப்பை விட அவருடன் மை டியர் மச்சான் பாடலுக்கு போட்ட ஆட்டத்திலேயே பலருக்கும் நெஞ்சு வலி வராத குறை தான். இந்த படத்தினை தொடர்ந்தே சாய் பல்லவிக்கு தமிழில் அங்கீகாரம் கிடைத்தது.

சூர்யாவுடன் என்.ஜி.கே, அவர் தனியாக நடித்த கார்கி உள்ளிட்ட படங்களை தொடர்ந்து பெரிய வாய்ப்புகள் கோலிவுட்டில் சாய் பல்லவிக்கு கிடைக்கவில்லை. ஆனால் அதே நேரத்தில் தெலுங்கில் லவ் ஸ்டோரி, விரட்ட பர்வம், ஸ்யாம் சிங்கா ராய் உள்ளிட்ட சூப்பர்ஹிட் படங்களில் நடித்திருந்தார்.

இதையும் படிங்க: நான் தரேன்… சரோஜாதேவிக்காக சூர்யா செய்த செயல்.. முந்திக்கொண்டு முன்னே வந்த உதயநிதி!

இந்நிலையில் சாய் பல்லவிக்கும் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமிக்கு திருமணம் நடந்து விட்டதாக அவரின் ஃபேன் எக்ஸ் அக்கவுண்ட்டில் இருந்தே ஒரு புகைப்படம் பகிரப்பட்டது. அதை பார்த்த மற்றவர்களும் இதை உண்மை எனக் கருதி அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இதை தொடர்ந்தே அது சிவகார்த்திகேயனின் 21வது பட பூஜையில் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் என தகவல்கள் வெளியானது. ராஜ்குமார் இயக்கும் படத்தில் தான் நாயகியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாகவில்லை. வதந்திய நிறுத்துங்கப்பா என பலரும் கடிந்து வருகின்றனர்.

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily