×

மீண்டும் உருவாகிறது பிரபுதேவா & நயன்தாரா கூட்டணி!

தனது முன்னாள் காதலர் பிரபுதேவா இயக்கத்தில் ஒரு படத்தில் நயன்தாரா நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

 

தனது முன்னாள் காதலர் பிரபுதேவா இயக்கத்தில் ஒரு படத்தில் நயன்தாரா நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

நயன்தாரா தனது சினிமா வாழ்க்கையின் ஆரம்பக்கட்டத்தில் சிம்புவைக் காதலித்தார். ஆனால் ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்தனர். பின்னர் 2009 ஆம் ஆண்டு வில்லு படத்தில் அவர் நடித்த போது அந்தப்படத்தின் இயக்குனரும் நடிகருமான பிரபுதேவாவைக் காதலித்தார். இதற்காக நயன்தாரா மதம் மாற, பிரபுதேவா தனது மனைவியை விவாகரத்து செய்தார். இருவரும் மும்பையில் செட்டில் ஆகி திருமணம் செய்ய நினைத்தனர். ஆனால் பிரச்சனைகளால் அந்த காதலும் முடிவுக்கு வந்தது.

அதன் பின் சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வந்த நயன், நானும் ரௌடிதான் படத்தில் நடித்த போது இயக்குனர் விக்னேஷ் சிவனைக் காதலிக்க ஆரம்பித்தார். இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது பிஸியாக நடித்துவரும் நயந்தாரா அடுத்து பிரபுதேவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே தன்னுடை முன்னாள் காதலரான சிம்புவோடு இது நம்ம ஆளு படத்திலும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News