×

எந்தப் படமுமே ரிலீஸாக மாட்டேங்குதே... தவிக்கும் முன்னணி நடிகர் 

முன்னணி நடிகர், இயக்குனரான பிரபுதேவா நடிப்பில் 3 படங்கள் ரிலீஸாகாமல் பாதியிலேயே நிற்கின்றன. 
 
எந்தப் படமுமே ரிலீஸாக மாட்டேங்குதே... தவிக்கும் முன்னணி நடிகர்

தமிழில் நடன இயக்குனராக அறிமுகமாகி பின்னர் நடிகராகக் களமிறங்கியவர் பிரபுதேவா. தமிழில் விஜய்யை வைத்து இவர் இயக்கிய போக்கிரி பெரிய ஹிட்டடித்தது. அதன்பின்னர், தமிழ், ஹிந்தியில் முன்னணி இயக்குனரானார். 


இடையில் ஹீரோவாகவும் கோலிவுட்டில் நடித்து வருகிறார். தொடர்ச்சியாக படங்களில் பிஸியாக இருந்தாலும், இவர் நடித்து முடித்த 3 படங்கள் ரிலீஸாகாமல் இடையில் நிற்கின்றன. பிரபுதேவாவின் `யங் மங் சங்’ போஸ்டர் 2019ம் ஆண்டு வெளியானது. இந்தப் படம் என்ன ஆனதென்றே தகவல் இல்லை. அதற்குப் பிறகு பொன் மாணிக்கவேல் டீசர் 2019ம் ஆண்டு வெளியானது. இந்தப் படமும் ஷூட்டிங் முடிந்து ரிலீஸாகவில்லை. இதுதவிர தேள் படமும் எந்த நிலையில் இருக்கிறது எனத் தெரியவில்லை. 

இதையெல்லாம் விட, பிரபுதேவா அடுத்ததாக பகீரா, ஊமை விழிகள் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். ஆனால், முன்னர் நடித்த படங்கள் ரிலீஸாகவில்லை என்பது பிரபுதேவாவுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறதாம்.  

From around the web

Trending Videos

Tamilnadu News