Categories: Cinema News latest news

மகளின் முதல் வாழ்க்கை விவகாரத்தில் முடிய பிரபு தான் காரணமா..? பயில்வான் வெளியிட்ட ஷாக் தகவல்.!

Bayilvan Ranganathan: சமீபத்தில் கோலிவுட்டில் நடக்கும் எல்லா விஷயங்களுக்கும் போய் பேசி விடுவதை வாடிக்கையாக வைத்து இருக்கிறார் பயில்வான் ரங்கநாதன். அந்த லிஸ்ட்டில் நேற்று திருமணம் செய்துக்கொண்ட ஆதிக் ரவிசந்திரன் – ஐஸ்வர்யா திருமணம் குறித்தும் சில தகவல்களை வெளியிட்டு இருக்கிறார்.

பிரபுவின் ஒரே மகளான ஐஸ்வர்யா அவரின் அத்தை மகனான குணாலை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனார். அந்த சமயத்தில் தான் பிரபு தன் தந்தை சொத்துக்களை சகோதரிகளுக்கு சரியாக பிரித்து கொடுக்காத பிரச்னை உருவானது.

இதையும் படிங்க: நிக்‌ஷனுக்காக இன்னொரு பலியாடு.. பிக்பாஸில் இந்த வார எலிமினேஷன் இவர் தானா..?

இதனால் ஐஸ்வர்யாவின் மாமியாரான தேன்குழலி நீதிமன்றத்தில் வழக்கு போட்டார். பிரபுவின் இந்த செயலால் அவரின் மருமகனான குணாலும் வருத்தப்பட்டு போனாராம். இதனால் தான் இனி இந்தியா வரவே மாட்டேன் என ஐஸ்வர்யாவிடம் கூறி இருக்கிறார். அமெரிக்காவிலேயே செட்டில் ஆகிட்டாராம்.

அதை தொடர்ந்து அம்மா பேச்சை கேட்கும் பிள்ளையாக ஐஸ்வர்யாவுடம் சரியாக பேசாமல் சண்டை பிடித்து இருக்கிறார். பிரச்னை பெரிதாக ஒரு கட்டத்தில் இருவரும் விவகாரத்து வாங்கிக்கொண்டு பிரிந்தனர். ஐஸ்வர்யா இந்தியா திரும்பினார். இருந்தும் அவர் சும்மா இல்லாமல் சென்னையிலேயே மிகப்பெரிய பேக்கிங் நிறுவனத்தினை நடத்தி வருகிறார்.

இதையும் படிங்க: ஒரு படத்துக்கு இசையமைத்த ஐந்து இசையமைப்பாளர்கள்… பாட்டு எல்லாமே ஹிட்டு.. என்ன படம் தெரியுமா?

இந்த நிலையில் இவருக்கும் ஆதிக் ரவிசந்திரனுக்கும் நட்பு ஏற்பட்டதாம். ஆனால் இந்த காதலுக்கு பிரபு உடனே ஓகே சொல்லிவிடவில்லை. தன் மருமகனை பெரிய இடத்துக்கு எதிர்பார்த்தாராம். அப்போது தான் மார்க் ஆண்டனி ஹிட், அஜித்துடன் அடுத்த படம் என ஆதிக்கின் கேரியர் கிரேவ் பீக் ஆனது. இதை தொடர்ந்து இருவருக்கும் கல்யாண பேச்சு தொடங்கி நேற்று கோலாகலமாக நடந்து முடிந்து இருக்கிறது.

குறைவான செலிபிரிட்டிக்கு மட்டுமே அழைப்பு கொடுத்து பெரிய ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இந்த விழா நடத்தி இருக்கிறார். இரண்டாம் திருமணம் என்பதால் நிகழ்ச்சிக்கு எந்த பத்திரிக்கையாளர்களுக்குமே அழைப்பு இல்லை என்று பயில்வான் ரங்கநாதன் தன்னுடைய சமீபத்திய வீடியோவில் தெரிவித்து இருக்கிறார்.

இதையும் படிங்க: கம்போசிங்காக போன இடத்துல இப்படி பண்ணுவாருனு நினைக்கல! இளையராஜாவை பற்றி பிரபலம் பகிர்ந்த சீக்ரெட்

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily