Categories: Bigg Boss latest news television

ரெட் கார்ட் கொடுத்தது தப்பு தான்… ப்ரதீப் ஆண்டனிக்கு பெத்த வாய்ப்பை கொடுத்த விஜய் டிவி..! கெத்து மேன் கெத்து…

Biggboss Pradeep: பிக்பாஸ் தமிழ் ரியாலிட்டி நிகழ்ச்சியில் கடந்த வாரம் ப்ரதீப் ஆண்டனிக்கு கொடுத்த ரெட் கார்ட் சமூக வலைத்தளம் முழுவதிலும் பேசுபொருளாக மாறியது. இது விஜய் தொலைக்காட்சிக்கு மிகப்பெரிய பிரச்னையாக அமைந்தது. அதை சரிசெய்ய தற்போது களத்தில் இறங்கி இருக்கின்றனர்.

சக போட்டியாளர்கள் அனைவரும் ப்ரதீப் ஆண்டனி மீது உரிமைக்குரல் எழுப்பினர். அவர் பெண்களுக்கு பிரச்னையாக இருப்பதாக குற்றம் சாட்டினார். இதனால் அவர்களை கன்பர்ஷனுக்கு அழைத்து ரெட் கார்ட் கொடுக்கிறீர்களா எனக் கேட்க அர்ச்சனா, விசித்ரா, தினேஷ் தவிர மற்ற அனைவருமே ரெட் கார்ட் கொடுத்தனர்.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயனுக்கு வந்த அடுத்த சோதனை… ஒரு வேளை தனுஷோட வேலையா இருக்குமோ?…

இதை தொடர்ந்து அந்த விஷயம் பலர் மத்தியில் விமர்சனம் ஆனது. பலரும் ப்ரதீப் மீது தப்பில்லை என்றனர். வைத்த குற்றச்சாட்டுகள் பொய் என வீடியோ மூலமாக நிரூபித்தனர். அதனால் கமல் வந்து மன்னிப்பு கேட்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் விசாரித்து தான் தீர்ப்பு கொடுத்தேன் என சப்பை கட்டு கட்டினார். போட்டியாளர்களிடமும் உண்மையாக தானே சொன்னீங்க என பலமுறை கேட்டார்.

இதனால் ப்ரதீப்புக்கு அநீதி நடந்துவிட்டதாக அனைவரும் குற்றச்சாட்டுக்களை வைத்து வருகின்றனர். கமல் மீது இன்னமும் விமர்சனம் இருந்து கொண்டே தான் உள்ளது. இதில் ப்ரதீப் மீது தப்பில்லை எனக் கூறி அவரை நிகழ்ச்சிக்குள் விட்டால் அது கமல் மீது பெரிய ப்ளாக் மார்க்கை கொடுக்கும்.

இதையும் படிங்க: ஜிகர்தண்டா டபுள் எக்ஸின் வசூல் இத்தனை கோடியா..? ஜப்பான் படத்தினை தூக்கி சாப்பிட்ட பக்கா சம்பவம்..!

இதனாலே அவரை மீண்டும் நிகழ்ச்சிக்குள் அழைத்து வருவதற்கு கமல் ஒப்புக்கொள்ளவில்லையாம். ஆனால் நிகழ்ச்சி நிர்வாகம் டிஆர்பிக்காக அவரை அழைத்து வர சம்மதமே தெரிவித்ததாம். கடைசியில் கமல் மறுப்பு தெரிவித்ததால் ப்ரதீப்புக்கு வேறு ஒரு வாய்ப்பை கொடுக்க இருக்கிறார்களாம்.

டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒரு வெப் சீரிஸ் இயக்கும் வாய்ப்பை ப்ரதீப் ஆண்டனிக்கு கொடுக்க இருக்கிறார்கள். இதனால் அதுக்கு ஒரு கதை எழுதவும் கூறி இருக்கிறார்களாம். ப்ரதீப் எழுதிய கதை ஓகே ஆகும் பட்சத்தில் விரைவில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
Shamily