Categories: Cinema News latest news throwback stories

சொந்த வீட்டுக்குள்ளயே திருட்டுத்தனமாதான் வருவார் விஜய்! – இது புது நியூஸா இருக்கே!..

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் பலரும் நடிகர் என்றே ஏற்றுக்கொள்ளப்படாமல் இருந்தவர். படிப்படியாக வளர்ந்து தமிழின் பெரும் நடிகராக மாறியவர் நடிகர் விஜய். தற்சமயம் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் விஜய்தான் நம்பர் ஒன் என கூறலாம்.

சிறு வயது முதலே சினிமாவில் நடித்து வருகிறார் விஜய். சிறு வயதில் பல படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அப்போதைய காலக்கட்டத்தில் அவர் சினிமாவிற்கு வருவதற்கு அவரது தந்தை எஸ்.ஏ சந்திரசேகர்தான் உதவியாக இருந்தார்.

எஸ்.ஏ சந்திரசேகர் விஜயகாந்தை வைத்துதான் அதிக படங்களை இயக்கியுள்ளார். எனவே விஜய்க்கும் கூட அதிகப்பட்சம் விஜயகாந்த் படங்களிலேயே வாய்ப்புகள் கிடைத்தன. நிறைய விஜயகாந்த் திரைப்படங்களில் விஜய் சிறுவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

விஜய் செய்த காரியம்:

விஜய்யை குறித்து ஒரு பேட்டியில் எஸ்.ஏ.சி பேசி கொண்டிருந்தார். அப்போது சுவாரஸ்யமான ஒரு விஷயத்தை பகிர்ந்திருந்தார். எஸ்.ஏ சந்திரசேகர் வீடு கட்டும்போது அவரது மகன் விஜய்க்கு தனியாக ஒரு அறையை கட்டியிருந்தார்.

விஜய் அருகாமையில் இருக்கும் பள்ளியில்தான் சிறுவயதில் படித்து வந்தார். பள்ளி விட்டு வீட்டிற்கு வந்ததும் யாருக்கும் தெரியாமல் பைப் வழியாக ஏறி அவரது அறைக்கு சென்று விடுவார். இன்னமும் பையன் வீட்டிற்கு வரவில்லையே என அவர்கள் தேடி கொண்டிருக்க சர்ப்ரைஸ் என முன்னால் வந்து நிற்பாராம் விஜய்.

ஆனால் இப்போது அந்த வீடு யாருமே இல்லாமல் காலியாக இருக்கிறது என கூறியுள்ளார் எஸ்.ஏ சந்திரசேகர்.

இதையும் படிங்க: வெறும் லாரன்ஸ் ராகவா லாரன்ஸாக ஆனது எப்படி?… சிறு வயதில் ஒரு அபூர்வ சம்பவம்

Published by
Rajkumar