×

கிளாமருக்கும் ஆபாசத்துக்கும் வித்தியாசம் இருக்கு... கிளாஸ் எடுத்த ப்ரியா பவானி ஷங்கர் 

கிளாமருக்கும் ஆபாசத்துக்கும் வித்தியாசம் இருக்கு என்கிறார் நடிகை பிரியா பவானி ஷங்கர். 
 
கிளாமருக்கும் ஆபாசத்துக்கும் வித்தியாசம் இருக்கு... கிளாஸ் எடுத்த ப்ரியா பவானி ஷங்கர்

செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் சீரியல்கள் மூலம் தமிழக ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றவர் பிரியா பவானி ஷங்கர். அதன்பின்னர், மேயாத மான் படம் மூலம் வெள்ளித் திரையிலும் வரவேற்பைப் பெற்ற அவர் தொடர்ச்சியாக அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். 

கிளாமர் வேடம் குறித்து ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கும் பிரியா, ``விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் த்ரிஷா கிளாமர் பண்ணாங்க. அதுல ஸ்கின் வெளியே தெரியல. முகம் சுளிக்க வைப்பது தான் கிளாமர் என்றால் அதை ஆபாசம் என்றுதான் சொல்லுவேன். 

நான் ரொம்ப எளிமையான பொண்ணு. கிளாமர் பொண்ணு இல்லை. டிவியிலிருந்து சினிமாவுக்கு வந்து சில படங்கள்ல நடிச்சாங்கன்கிற தவறான முன்ணுதாரணத்தை ஏற்படுத்த விரும்பல. மேயாத மான் படத்தில் நடிச்சேன். மக்கள் வரவேற்புக் கொடுத்தாங்க. கிடைக்கும் எல்லா படங்களிலும் நடிப்பதை விட, ஒரு சில நல்ல படங்களில் நடிப்பதே மேல்’’ என்று கூறியிருக்கிறார். 


 

From around the web

Trending Videos

Tamilnadu News