Connect with us

Cinema News

விஜய் வாய்க்கு வந்ததை பேசுனாரு.. அது எதுமே நடக்காது.. இதையாவது செஞ்சா போதும்.. கே. ராஜன் அதிரடி!

சினிமா நடிகர்கள் 100 கோடி சம்பாதித்து விட்டு ரசிகர்களை சந்திக்கக் கூட வரமாட்டேன் என அடம்பிடிப்பது எல்லாம் அயோக்கியத்தனம் என சமீபத்தில் ஜெய் ஆகாஷ் தயாரிப்பில் வெளியாகும் பட விழாவில் கே. ராஜன் கொந்தளித்துப் பேசினார்.

மேலும், நடிகர் விஜய் பேசியது ரொம்பவே மிகையானது என்றும் அதெல்லாம் நடக்காது என்றும் அஜித்துக்கும் விஜய்க்கும் குட்டு வைப்பது போல அவர் பேசியிருக்கும் வீடியோ யூடியூபில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: சிவாஜி கன்னத்தில் பளாரென அறைந்த நடிகை!.. மனுஷனுக்கு என்ன ஆச்சி தெரியுமா?…

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி எந்தவொரு உலக சினிமாவில் இருந்தாலும் சரி நடிகர்கள் முதலில் தனது ரசிகர்களை மதிக்க வேண்டும். அப்படி ரசிகர்களை மதிக்கத் தவறினால் பதிலுக்கு ரசிகர்களும் எங்களுடைய வேலை வேறு நாங்க அதை பார்க்கப் போறோம். உன் படத்தை பார்க்க ஏன் தியேட்டருக்கு காசு செலவு பண்ணிட்டு வரணும் என நினைத்து விட்டால் அந்த நடிகனே காலி ஆகிடுவான் என பேசியுள்ளார்.

நடிகர் விஜய் லியோ படத்தின் வெற்றி விழாவில் பேசும் போது என் தோலை ரசிகர்கள் காலுக்கு செருப்பா தச்சு போடணும்னு ரொம்பவே மிகைப்படுத்தி பேசினார். அதெல்லாம் நடக்கிற காரியமா? எல்லாமே சுத்த போலித்தனம்.

இதையும் படிங்க: பேரு மட்டும் தமிழ்நாட்டின் தளபதி!.. வைக்கிறது பூரா இங்கிலீஷ் டைட்டில்.. தளபதி 68 டைட்டில் லீக்?..

அதை பண்ணாமல், 6 மாசத்துக்கு ஒரு முறை ரசிகர்களுக்கு விருந்து வைத்தோ அல்லது ஒரு போட்டோ செஷன் வைத்தாலே அவன் கடவுளை பார்த்தது போல சந்தோஷப்படுவானே என பேசி பரபரப்பை கிளப்பி உள்ளார்.

விஜய், அஜித்தை தாண்டி சூர்யா குடும்பம் மற்றும் அமீர் – ஞானவேல் பஞ்சாயத்து சினிமாவில் பெரிய அசிங்கமாக மாறி வருகிறது. ஆனால், சம்பந்தப்பட்டவர்கள் இதில் அமைதியாக இருப்பது பெரிய தவறு என்றும் வழக்கம் போல சரவெடியாக வெடித்து விட்டார்.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top