Connect with us

Cinema News

பேரு மட்டும் தமிழ்நாட்டின் தளபதி!.. வைக்கிறது பூரா இங்கிலீஷ் டைட்டில்.. தளபதி 68 டைட்டில் லீக்?..

நடிகர் அஜித் தொடர்ந்து நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு, விடாமுயற்சி என தமிழில் தலைப்பு வைத்து தமிழ்நாட்டின் தலைமகன் என நிரூபித்து வருகிறார். ஆனால், அந்த பக்கம் அவருக்குப் போட்டியாக உள்ள நடிகர் விஜய் எப்படியாவது பேன் இந்தியா ஹிட் அடிக்கணும் பைசா சம்பாதிக்கிறது தான் முக்கியம் என தொடர்ந்து இங்கிலீஷ் டைட்டில் அதுவும் ஏற்கனவே வந்த இங்கிலீஷ் பட டைட்டிலாவே வச்சுக்கிட்டு வராரே என விமர்சனங்கள் கிளம்பி உள்ளன.

மாநாடு படம் வெற்றி அடைந்ததும் நடிகர் விஜய்க்கு மூளைச்சலவை செய்து அதே போல ஒரு படம் கொடுக்கிறேன் என உறுதி அளித்து அடுத்து தான் இயக்கி தோல்வியடைந்த மன்மத லீலை மற்றும் கஸ்டடி உள்ளிட்ட படங்களை மறைத்து தளபதி 68 படத்தை இயக்கி வருகிறார்.

இதையும் படிங்க: த்ரிஷா பண்ணியது அநியாயம்! 20 வருஷத்துல இதுதான் கத்துக்கிட்டாங்களா? வெளுத்து வாங்கும் பிரபலம்

இதுவும் எந்த ஹாலிவுட் படத்தின் காப்பி என தெரியலையே என நெட்டிசன்கள் சிந்தித்து வரும் நிலையில், தளபதி 68 படத்தின் டைட்டில் இதுதான் என சமூக வலைத்தளங்களில் ‘பாஸ்’ என்கிற டைட்டிலுடன் ஃபேன் மேட் போஸ்டர்களையும் விஜய் ரசிகர்களே உருவாக்க ஆரம்பித்து விட்டனர்.

வாரிசு படத்திலேயே பாஸ் ரிட்டன்ஸ் என்கிற சப் டைட்டில் வைக்கப்பட்டிருக்கும். இந்நிலையில், பாஸ் டைட்டிலை தளபதி 68 க்கு வைத்து விட்டார்களா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

இதையும் படிங்க: ‘ரஜினி 171’ கதை என்னனு தெரியும்! ஸ்கிரிப்ட்டில் ஏகப்பட்ட குறைகள் – ஐய்யோ தலைவா! இது என்ன சோதனை?

மாஸ்டர், பீஸ்ட், லியோ என தொடர்ந்து நடிகர் விஜய் ஆங்கில தலைப்புகளை வைத்து வரும் நிலையில், கடும் விமர்சனங்களும் எழுந்து வருகின்றன. ஆனால், பாஸ் என்பது உண்மையான டைட்டில் அல்லது சோசியல் மீடியாவின் உருட்டு டைட்டிலா என்பது வரும் டிசம்பர் 31-ஆம் தேதி தெரிந்துவிடும்.

ஒவ்வொரு ஆண்டும் தனது ரசிகர்களுக்கு பண்டிகை நாட்களில் மறக்காமல் அப்டேட் ட்ரீட் கொடுத்து வரும் நடிகர் விஜய் இந்த ஆண்டும் புத்தாண்டை முன்னிட்டு தளபதி 68 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை தனது சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டு டிரெண்டிங்கை தெறிக்க விட காத்திருக்கிறார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top