Categories: Cinema News latest news

தனுஷ், நயன்தாரா ரெண்டு பேருக்குமே அறிவில்லை… கிழித்து தொங்க விட்ட தயாரிப்பாளர்

சமீபத்தில் தனுஷ், நயன்தாரா இருவருக்கும் இடையில் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை பூதாகரமாக கிளம்பியது. நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமண ஆவணப்படத்தில் தனுஷ் தயாரித்த நானும் ரௌடி தான் படப்பாடலில் இருந்து 3 வினாடிகள் காட்சி இடம்பெற்றிருந்தது. இதற்காக தனுஷ் 10 கோடி கேட்டார். இதனால் கொந்தளித்த நயன்தாரா 3 பக்கத்துக்கு அறிக்கை விட்டார். மீடியாக்களில் இது வைரலானது. அதன்பிறகு நெட்பிளிக்ஸில் வெளியானது ஆவணப்படம்.

Also read: ரஹ்மான் எப்படிப்பட்டவருனு தெரியும்..எல்லாம் பணத்துக்காக தான்! பாடகர் போட்ட பதிவு

ஆனால் அதில் 23 வினாடிகள் நானும் ரௌடிதான் படத்தில் உள்ள காட்சிகள் வெளியாகி இருந்தது. அதற்கு தனுஷ் என்ன செய்யப்போகிறார் என்று பிரச்சனை போய்க்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் தனுஷ், நயன்தாரா குறித்து பிரபல தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் பேசியுள்ளது சலசலப்பை உண்டாக்கி உள்ளது. என்னன்னு பாருங்க.

தனுஷ் நயன்தாரா ரெண்டு பேருக்கும் அறிவு இல்லை. ரெண்டு பேரும் சினிமாவுல நிறைய சம்பாதிக்கிறாங்க. ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக் கொடுக்கலாம். ரெண்டு பேருக்கும் காசு இருக்கு. ஏன் இப்படி பேயா அலையறீங்க. இருக்குற காசு பத்தாதா? இரண்டு பேரும் யாரு சொன்னா கேட்பாங்களோ அந்த மாதிரி பெரிய ஆளா பார்த்து கூப்பிட்டு பேசியிருக்கலாம். இல்லன்னா பெரிய ஜட்ஜ் யாரையாவது கூப்பிட்டு இந்த மாதிரி பிரச்சனை இருக்குன்னு சொல்லி பேசிருக்கலாம்.

Manickam narayanan

தனுஷ் மேலயும் பெரிய அளவில் பேரு இல்லை. மீடியாவுல சொல்லி என்ன பிரயோஜனம்? சமீபத்தில் கூட திருமண விழா ஒன்றில் இரண்டு பேரும் திரும்பி உட்கார்ந்துருக்காங்க. தெளிவான சிந்தனை இருந்தா ஏன் பயப்படுற? நானா இருந்தா நேரடியா போய் பேசி இருப்பேன். நீ நடிகன் இல்ல. நடிகை இல்ல. நீ ஒரு மனுஷன். என்னப்பா இப்படி பண்றேன்னு கேட்டுருப்பேன். அஜீத்தைக்கூட நேரில் பார்த்தா எனக்குப் பயமில்லை.

Also read: Biggboss Tamil 8: வைல்டு கார்டு போட்டியாளர் ‘ரீ-என்ட்ரி’… ‘இதுக்கு பருத்திமூட்டை’.. ரசிகர்கள் கிண்டல்!

கூப்பிட்டு என்ன தம்பி, முறைச்சிக்கிட்டே இருக்கே. வாங்கினே இல்லப்பா… இந்தாருக்கு என்ன தம்பின்னு சொல்ல மாட்டேனா… இதுல என்ன இருக்கு? அவரு வேணா என்னைப் பார்த்துப் பயப்படலாம். எனக்கு என்ன பயம்? மடியில கனம் இருந்தா தான் பயம்? இதெல்லாம் ஈசியா சால்வ் பண்ணிடலாம் என்கிறார் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன்.

 

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v