Connect with us
IRMN

Cinema News

இளையராஜாவை குறை சொல்ல எவனுக்கும் அருகதை இல்லை… அந்த விஷயத்துல அஜீத் மாதிரி இருக்காதீங்க..!

மாணிக்கம் நாராயணன் ‘பட் பட்’ என்று பேசக்கூடிய பிரபல தயாரிப்பாளர். இவர் இளையராஜா, லோகேஷ் கனகராஜ் குறித்து என்னென்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

இளையராஜாவை எல்லாரும் திமிர் பிடித்தவர்னு சொல்றாங்க. அது என்னைப் பொருத்தவரை ஒரு பர்சன்ட் கூட தப்பு கிடையாது. அவரது சாதனைக்கு எவனாலும் கிட்ட போக முடியாது. அதாவது ஒரு வயசுக்கு அப்புறம் ஒரு மனிதன் எந்த ஒரு விஷயத்திலும் திறமை உள்ளவனாகி விடுகிறான்.

இதையும் படிங்க…கமுக்கமா வாசிக்கும் சத்யராஜ்! கேஸ் இல்லாம வெளியில வரனும்.. கட்டப்பாவையே குலுக்கிய ‘கூலி’

அப்போது அவனது சாதனையை யாராலும் நெருங்க முடியாது என்ற நிலைக்குப் போகும்போது யாராவது அவனை சீண்டினால் அதாவது அவரது வெற்றியை சேலஞ்ச் பண்ற மாதிரி ஏதாவது பேசினால் அவருக்குக் கோபம் வரும்.

அந்த மாதிரி தான் இளையராஜாவும். அவரது சாதனையைக் கிட்டக்கூட நெருங்க முடியாத துக்கடா பயல் எல்லாம் அவரைப் பற்றி எதுக்குப் பேசணும்? அது வந்து அவருக்கு ஒரு மனத்தாங்கலா இருக்கலாம். அதனால அவருடைய திமிரை வந்து எவனுக்குமே குறை சொல்ற அளவுக்கு சாதனையாளனும் இல்லை. எவனுக்குமே அந்த அருகதை கிடையாது. அது எவனா இருக்கட்டும்.

நான் அவனை ‘அவன் இவன்’னு தான் சொல்வேன். அவன் இந்தி, இங்கிலீஷ்னு எவனா வேணாலும் இருக்கலாம். அவருக்கு நிகர் அவரே. அவரோட கோரிக்கை கோர்ட்ல இருக்கு. அதுல நாம தலையிட வேண்டாம். இளையராஜா சாரிடம் எனது நட்பு கெடாம இருக்கணும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க… ரஜினிகாந்தின் அடுத்த பிளான் கூலி இல்லையாம்… என்ன செய்ய இருக்கிறார் தெரியுமா? அதானே எப்படி மிஸ்ஸாகும்…

லோகேஷ் கனகராஜ் என்னை குழப்புறாரு. அவரைப் பிடிக்கல. வன்முறை மட்டுமே வாழ்க்கை இல்லை. ‘நம்ம பவர்புல் மீடியாவுல இருக்கோம். நம்மளால சொசைட்டிக்கு எதாவது நல்லது செய்ய முடியுமா’ன்னு கொஞ்சமாவது யோசிக்கணும். நம்ம வந்து ஜெயிக்கணும். காசு சம்பாதிக்கணும்னு அஜீத்குமார் மாதிரியே இருக்கக்கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கமல் நடித்த ‘வேட்டையாடு விளையாடு’ படத்தைத் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தும் இவர் கமலுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading

More in Cinema News

To Top