ரஜினிகாந்தின் அடுத்த பிளான் கூலி இல்லையாம்… என்ன செய்ய இருக்கிறார் தெரியுமா? அதானே எப்படி மிஸ்ஸாகும்…

Rajinikanth: தன்னுடைய வேட்டையன் திரைப்படத்தை முடித்துக் கொண்டு நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய அடுத்த பிளானிற்காக கூலி திரைப்படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கு மாறாக இன்னொரு விஷயத்தை செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் தன்னுடைய திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தொடர்ச்சியாக திரைப்படங்களை ஒப்புக்கொண்டு வரும் நிலையில் அவரின் அடுத்த படமான வேட்டையன் திரைப்படத்தின் சூட்டிங் மொத்தமாக முடித்து இருக்கிறார்.

இதையும் படிங்க: பாரதிராஜாவுக்கு முன்னாடியே ரேவதிக்கு ‘பளார்’ கொடுத்த பாண்டியன்.. ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த களேபரம்!..

இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்து கூலி திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்க வருகிறார். இப்படத்தை பிரம்மாண்டமாக இயக்க முடிவு செய்திருப்பதாகவும், அதற்கான வேலைகளில் லோகேஷ் இறங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. அனிருத் படத்திற்கு இசையமைக்க இருக்கிறார்.

ஏற்கனவே ஜெயலர் படத்தில் இக்கூட்டணி வெற்றி பெற்றதால் கூலி திரைப்படத்தின் பாடல்கள் மீதும் ரசிகர்கள் தற்போதைய பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கின்றனர். சமீபத்தில் ஷூட்டிங் முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய ரஜினிகாந்த் கூலி திரைப்படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரஜினிகாந்தின் பழக்கமான ஆன்மீக சுற்றுப்பயணத்திற்கு அடுத்த ஒரு வாரம் இமயமலை செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இதையும் படிங்க: இந்தியன்2 படத்தில் ரொமான்ஸ் செய்யும் சித்தார்த் மற்றும் ரகுல் ப்ரீத்… கமலுக்கு இல்லாத ஸ்பெஷலா?

ஒவ்வொரு வருடமும் சூட்டிங் முடிந்த பின்னர் ஆன்மீகப் பயணம் மேற்கொள்ளும் ரஜினிகாந்த் ஜெயிலர் படம் முடிந்த செல்லாமல் வேட்டையன் திரைப்படத்தில் இணைந்து விட்டார். அதனால் கூலி திரைப்படத்திற்கு முன்னர் இந்த பயணத்தை முடித்துக் கொண்டு வந்த பின்னரே சூட்டிங் நினைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கேத்ரிநாத், பத்ரிநாத், பாபாஜி குகை ஆகிய இடங்களுக்கு சென்று வர இருக்கிறாராம்.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்தபோது, இசை மற்றும் கவிதை இடையே போட்டி சினிமா உலகில் இருக்கிறதே எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அண்ணா நோ கமெண்ட்ஸ் எனக் கூறிவிட்டு அரசியல் குறித்த கேள்விக்கும் அரசியல் கேள்வி எல்லாம் வேண்டாம் எனக் கூறி கிளம்பிவிட்டார். இதுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

Related Articles

Next Story