×

பெரும் தொகையால் `பில்லா’ வாய்ப்பை இழந்த விஜய் பட நடிகை!

நடிகர் அஜித் நடிப்பில் கடந்த 2007ல் வெளியான பில்லா படத்தில் நயன்தாரா கேரக்டரில் முதலில் நடிக்க விஜய் பட நடிகையைத் தான் படக்குழு அணுகியிருக்கிறது. 
 
பெரும் தொகையால் `பில்லா’ வாய்ப்பை இழந்த விஜய் பட நடிகை!

சூப்பர்ஸ்டாரின் ரஜினியின் பில்லா படத்தை இயக்குனர் விஷ்ணுவர்த்தன் நடிகர் அஜித்தை வைத்து ரீமேக்கினார். நயன்தாரா, நமீதா என இரண்டு நடிகைகள் நடித்திருந்த அந்தப் படத்தில் அஜித்தின் ஸ்டைலான எண்ட்ரி ரசிகர்களைக் கட்டிப்போட்டது.

முன்னெப்போதும் இல்லாத வகையில் அந்தப் படத்தில் தாராளம் காட்டியிருந்தார் நயன்தாரா. படகும் பாக்ஸ் ஆபிஸில் சக்கைப்போடு போட்டது. இந்தநிலையில், நயன்தாரா கேரக்டரில் நடிக்க நடிகை இஷா கோபிகரைத் தான் படக்குழு முதலில் அணுகியிருக்கிறது. விஜய் நடித்த நெஞ்சினிலே மற்றும் அர்விந்த் சாமியுடன் என் சுவாசக் காற்றே, விஜயகாந்துடன் நரசிம்மா போன்ற படங்களில் அவர் நடித்திருந்தார். 


ஆனால், பில்லா படத்தில் நடிக்க அவர் ஒரு பெரும் தொகையைச் சம்பளமாகக் கேட்டிருக்கிறார். அதனால், படக்குழு நயன்தாராவை அணுகியிருக்கிறது. அதற்கு முன்பு நயன் பல ஃப்ளாப் படங்களைக் கொடுத்துக் கொண்டிருந்ததால், உடனடியாக இந்த வாய்ப்பை ஓக்கே பண்ணியிருக்கிறார். அத்தோடு ஜிம்முக்குச் சென்று உடல் எடையையும் குறைத்து அசத்தினாராம் நயன்தாரா.

From around the web

Trending Videos

Tamilnadu News