Categories: Cinema News latest news

திருப்பதி ஏழுமலையானுக்கு போட்டியாக குவிய போகும் கூட்டம்… புஷ்பாவின் மெகா அதிரடி அறிவிப்பு…

அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகி இந்தியா முழுக்க மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் புஷ்பா. தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடித்து இருந்த திரைப்படம் கொரோனாவுக்கு பிறகு வெளியான முதல் பான் இந்தியா பிளாக் பஸ்டர் திரைப்படமாக உருவெடுத்தது.

இந்த படத்தின் இரண்டாம் பாகம் அதனை விட பிரமாண்டமாக தயாராக உள்ளது. அதற்கான கதை விவாத இறுதி பணிகள் முடிந்துவிட்டன. விரைவில் ஷூட்டிங் ஆரம்பிக்க பட உள்ளன.

தற்போது படக்குழு படத்தில் நடிக்க புதுமுகங்களை தேடி வருகிறது. அதற்காக வயது வரம்பு, எதுவும் கிடையாது. ஆண், பெண் , குழந்தைகள் என பலரும் வரலாம் இந்த ஆடிசன் திருப்பதியில் நடைபெறுகிறது. ஆந்திர மாநிலம் சித்தூர் ஸ்டைலில் தெலுங்கு பேச வேண்டும் என குறிப்பிட பட்டுள்ளது.

இதையும் படியுங்களேன் – வெற்றிமாறன் காசு கொடுத்து தேசிய விருது வாங்கினாரா.?! ரசிகர்ளை ஷாக் ஆக்கிய செய்தி…

இந்த ஆடிசன் 3,4,5 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாம். வயது வரம்பின்றி இப்படி ஆடிசன் வைத்தால் நிச்சயம் திருப்பதி தேவஸ்தானுக்கு வரும் கூட்டத்தை விட இந்த கூட்டம் அதிகமாக இருக்கும் என கூறப்பட்டு வருகிறது. ஏனென்றால் அந்தளவுக்கு அந்த படத்திற்கு ஒரு நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை.

Manikandan
Published by
Manikandan