கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படம் எப்போது வெளியாகும் என்கிற அறிவிப்பை இன்னமும் அந்தத் தயாரிப்பு நிறுவனம் வெளியிடவில்லை.
இந்நிலையில் திடீரென எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல், ராஜ்கமல் நிறுவனம் தற்போது அமரன் குறித்த ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், நாட்டுக்காக வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் பற்றிய ட்ரிபியூட் வீடியோவாக அது அமைந்துள்ளது.
இதையும் படிங்க: தர்ஷா குப்தா கையை புடிச்சி விஷால் எங்க தள்ளிட்டு போறாருன்னு பாருங்க!.. என்னலாம் பண்ண வேண்டியிருக்கு!
கடைசிவரை அதில் ரசிகர்கள் எதிர்பார்த்த அமரன் படத்தின் ரிலீஸ் தேதி அல்லது ரிலீஸ் மாதம் குறித்த எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை. அமரன் படத்தின் டீசர் வெளியாகி பல மாதங்கள் ஆகும் நிலையில், டிரெய்லர் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை ராஜ்கமல் நிறுவனம் எப்போது வெளியிடும் என சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கடுப்பாகி கேட்டு வருகின்றனர்.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள அமரன் திரைப்படத்தின் கிளைமாக்ஸில் சிவகார்த்திகேயன் உயிர் இழந்து விடுவார் என்பது மட்டும் தற்போது வெளியாகியுள்ள வீடியோ மூலம் ரசிகர்களுக்கு தெரிய வந்திருக்கிறது.
இதையும் படிங்க: கில்லி ஹிட்டை தொடர்ந்து அந்த படமும் ரி-ரிலீஸ் ஆகுதான்!.. விஜய் பேன்ஸ்க்கு செம திருவிழாதான்!…
சிவகார்த்திகேயன் ரசிகர்களை தாண்டி சிம்பு ரசிகர்கள் ரொம்பவே வெறி ஆகி உள்ளனர். இந்தப் படமாவது எடுத்து முடித்துவிட்டு ரிலீஸ் அறிவிக்காமல் உள்ளனர். ஆனால் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ள எஸ்டிஆர் 48 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மட்டும் தான் இதுவரை வெளியாகியுள்ளது. அந்தப் படத்தின் ஷூட்டிங் நடக்கிறதா இல்லையா? என்கிற எந்த ஒரு அறிவிப்பையும் இதுவரை ராஜ்கமல் நிறுவனம் வெளியிடவில்லை.
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி பிரம்மாண்டமாக சிம்புவை வைத்து இந்தப் படத்தை உருவாக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் எஸ் டி ஆர் 48 படத்தை இன்னமும் ஆரம்பிக்காமல் தக் லைஃப் படத்தில் சிம்புவை நடிக்க வைத்து வருகிறார் கமல்ஹாசன் என்றும் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: குழந்தை பிறந்ததும் எல்லாம் போச்சு.. அட்லீ போட்ட ஷாக் பதிவு! வருத்தத்தில் காதல் மனைவி
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…