ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு இயக்குநர் நெல்சனுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் மிகப்பெரிய பிரைவேட் பார்ட்டி கொடுத்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. இந்நிலையில், இயக்குநர் நெல்சன் அடுத்ததாக ராகவா லாரன்ஸை இயக்குவாரா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.
ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் அனைத்து நாடுகளிலும் ஹவுஸ்ஃபுல் என சன் பிக்சர்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளது. முதல் நாளிலேயே ஜெயிலர் படம் 98 கோடி வசூல் என்றும் 100 கோடி வசூல் என்றும் ஏகப்பட்ட தகவல்கள் குவிந்து வருகின்றன.
இதையும் படிங்க: ‘ஜெய்லர்’ ஆரம்பத்தில் இருந்து ரிலீஸ் வரைக்கும் விஜய் இததான் சொன்னாரு! முதல் முறையாக நெல்சன் ஓப்பன் டாக்
நெல்சனுக்கு பார்ட்டி கொடுத்த ராகவா லாரன்ஸ்:
2 நாட்களில் ஒட்டுமொத்தமாக ஜெயிலர் படம் 150 கோடி ரூபாயை கடந்து விட்டதாக சொல்லப்படும் நிலையில், ராகவா லாரன்ஸ் சென்னையில் உள்ள சொகுசு ஹோட்டலில் காஸ்ட்லியான சூட் ரூமில் இயக்குநர் நெல்சனுக்கு ரகசியமாக பாராட்டு விழா பார்ட்டி ஒன்றை நடத்தியிருப்பதாக கூறுகின்றனர்.
ரஜினி படம் வெற்றியான நிலையில், ராகவா லாரன்ஸ் ஏன் பார்ட்டி கொடுக்கிறார் என்கிற கேள்வி இயல்பாக எழ, ரஜினிகாந்த் ஊரில் இல்லை. அவர் இமய மலையில் உள்ள நிலையில், அவரது ரசிகரான ராகவா லாரன்ஸ் பார்ட்டி வைத்துள்ளார் என்கின்றனர்.
இதையும் படிங்க: பாலய்யாவுக்கும் ஜெயிலர்ல சீன் வச்சிருந்த நெல்சன்.. இது ரஜினி படமா!.. இல்லை நண்பர்கள் மாநாடா?..
ரஜினி பட இயக்குநர்கள் தான் டார்கெட்:
ஆனால், ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பிரிந்த நிலையில், ரஜினி படங்களை இயக்கும் இயக்குநர்கள் அடுத்ததாக ராகவா லாரன்ஸ் பக்கம் தான் செல்கின்றனர் என்றும் இயக்குநர் நெல்சன் இன்னமும் அடுத்து யாரை இயக்குகிறார் என்பதை அறிவிக்காத நிலையில், ராகவா லாரன்ஸ் நெல்சனுக்கு அழகாக வலை விரித்து விட்டார் என்றும் கூறுகின்றனர்.
முன்னதாக ரஜினிகாந்தை வைத்து சந்திரமுகி படத்தை இயக்கி பிரம்மாண்ட வெற்றிக் கொடுத்த பி. வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 படத்தில் ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார். அதே போல ரஜினியை வைத்து பேட்ட படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் டார்க் காமெடியில் நடித்தாலும் சூப்பராகத் தான் இருக்கும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஜெயிலர் வசூலுக்கு முதல் ஆளாக வாழ்த்திய விஜய்!.. காக்கா – கழுகு கதைக்கும் முற்றுப்புள்ளி வைத்த நெல்சன்!..
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…