Categories: Cinema News latest news

ஓவரா பேசிய அறந்தாங்கி நிஷா.. ஒரு நிமிஷம் பக்கத்துல வந்து ராகவா லாரன்ஸ் பார்த்த வேலை!..

மாற்றம் எனும் அமைப்பைத் தொடங்கி மக்களுக்கு இலவசமாக பல சேவைகளை செய்யப்போவதாக ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார். கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமான பாலா தொடர்ந்து தன்னால் முயன்ற உதவிகளை பலருக்கும் செய்து வந்தார்.

ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து அவர் சிலருக்கு உதவி செய்த வீடியோக்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில், அதற்காகவே தனி அமைப்பை உருவாக்கி உதவி தேவைப்படுபவர்கள் கண்டறிந்து உதவி செய்யலாம் என்கிற முடிவுக்கு வந்து ராகவா லாரன்ஸ் மாற்றம் எனும் அமைப்பை உருவாக்கியுள்ளார்.

இதையும் படிங்க: பேனர் கிழிக்கத்தான் தெரியும்!.. பாக்ஸ் ஆபிஸில் கில்லியை தொடக் கூட முடியாத தீனா மற்றும் பில்லா!..

அந்த நிகழ்ச்சியில் எஸ்.ஜே. சூர்யா, அறந்தாங்கி நிஷா உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்று பேசினர். அறந்தாங்கி நிஷா பேசும்போது ராகவா லாரன்ஸ் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை என்னுடைய அம்மாவிடம் போய் காட்டினேன் அப்படியே நாம் பெத்த புள்ள மாதிரி இருக்காரே என்றார். நீ மட்டும் இல்லம்மா தமிழ்நாட்டில் பலர் பெற்ற பிள்ளையாகவே ராகவா லாரன்ஸ் அண்ணன் இருக்கிறார் எனக் கூறினேன் என்றார்.

தொடர்ந்து மாற்றம் அமைப்பு மூலமாக ராகவா லாரன்ஸ் விவசாயிகளுக்கு டிராக்டர்களை இலவசமாக வழங்குவது, மருத்துவ உதவிகளை செய்யப்போவது மற்றும் கல்வி தேவைப்படுபவர்களுக்கு அதற்கான உதவிகளை செய்ய முடிவு செய்துள்ளார்.

இதையும் படிங்க: என்.டி.ராமராவிடம் நடிகர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம்! சம்பள விஷயத்தில் எப்படிப்பட்டவர் தெரியுமா?

பல ஆண்டுகளாக பலரை தத்தெடுத்து வளர்த்து வரும் ராகவா லாரன்ஸ் அவர்கள் எல்லாம் தற்போது வளர்ந்து பெரிய ஆளாக மாறியுள்ள நிலையில், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பணியை கொடுத்து சேவை செய்ய ஒரு கூட்டத்தை திரட்டியுள்ளார் என அறந்தாங்கி நிஷா கூறியுள்ளார்.

தொடர்ந்து ராகவா லாரன்ஸை புகழ்ந்து தள்ளிக் கொண்டிருந்த அறந்தாங்கி நிஷா பேசி முடித்ததும் உடனடியாக ஒரு அருகே வந்து மைக்கை பிடித்த ராகவா லாரன்ஸ் இவர் ஏதோ டிவி சீரியல் நடிகை, இவர் பேசுவது கொஞ்சம் காமெடியாக இருக்கும் என நினைத்தேன். ஆனால் இந்த அளவுக்கு ஒரு எம்எல்ஏ ரேஞ்சுக்கு பேசுவார் என கொஞ்சமும் நினைக்கவில்லை என நிஷாவை கலாய்த்து விட்டார். மேலும், நிஷாவின் சேவைகளை பாராட்டி அவரது ஊருக்கு ஒரு டிராக்டரை அவர் பொறுப்பில் வழங்கப்போவதாகவும் ராகவா லாரன்ஸ் கூற நிஷா அந்த பணியை சிறப்பாக ஏற்று செய்கிறேன் எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: நீங்க செஞ்சது ரொம்ப பெரிய தப்பு!.. லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய பயில்வான்!..

Saranya M
Published by
Saranya M