ரஜினி, கமல் ஆரம்பகாலங்களில் இணைந்து பல படங்களில் நடித்துக் கொண்டிருந்த சமயம் அது. நடித்த பெரும்பாலான படங்கள் செம ஹிட். ஒரு நேரத்தில் நாம் இணைந்து இனிமேல் நடித்தால் நன்றாக இருக்காது. இருவருக்கும் ஒரு மார்க்கெட் இருக்கிறது. அதை நாம் தான் நல்லபடியாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
இனிமேல் நாம் தனித்தனியாக நடிப்பது தான் நல்லது என கமல் ரஜினிக்கு அறிவுரையை கூற நல்லது கமல் என ரஜினியும் அதை மனதார ஏற்றுக்கொண்டார். இது தெரியாமல் பஞ்சு அருணாச்சலம் தான் முதன் முதலாக ஆரம்பிக்க போகும் தயாரிப்புக் கம்பெனிக்கு இருவரையும் வைத்து ஒரு படம் பண்ணவேண்டும் என ஒரு கதையை தயார் செய்கிறார். ஆனால் இருவருமே இனிமேல் சேர்ந்து நடிக்க மாட்டோம் என்று முடிவு எடுத்த விஷயம் தெரிய வர
இதையும் படிங்க : பார்த்திபனுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய நஷ்டம்… ஏவிஎம் செய்த கைமாறு… ஆனா நீங்க நினைக்குற மாதிரி இல்ல…
அந்த கதையை ஒதுக்கி வைத்துவிட்டு தனித்தனியாக கதையை ஏற்பாடு செய்கிறார் பஞ்சு அருணாச்சலம். ரஜினிக்கு முத்து ராமன் இயக்கத்தில் ஆறிலிருந்து அறுபது வரை படமும் முத்து ராமனின் உதவியாளர் இயக்கத்தில் கமலுக்கு கல்யாணராமன் படமும் தயாராகுகிறது. ஆறிலிருந்து அறுபது வரை படப்பிடிப்பு தொடங்குகிறது. அந்த நேரத்தில் ரஜினிக்கு ஒரு சந்தேகம். கதையின் படி தன் குடும்பத்திற்காக ஒரு அண்ணன் படும்பாடு மிகையாக தெரிகிறதே? மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? என இயக்குனரிடம் ரஜினி முறையிடுகிறார்.
ஆனால் இயக்குனர் எவ்வளவு சொல்லியும் ரஜினி கேட்பதாக இல்லை. இதை பார்த்துக் கொண்ட அந்த படத்தின் நாயகி ஃபடாஃபட் ஜெயலட்சுமி படப்பிடிப்பில் இருந்து வெளியேறிவிட்டாராம். உடனே அங்கு வந்த பஞ்சு அருணாச்சலத்திடம் இந்த விவகாரம் போக ரஜினியிடம் அருணாச்சலம் ‘இந்த கதை ஒரு 5000 அடி வரை போகட்டும். அதன் பின் படத்தை பாருங்கள். பிடித்தால் நடிங்கள், இல்லையென்றால் அப்படியே ஓரங்கட்டிவிட்டு வேறுகதையை மாற்றலாம் என சொல்ல’ அதன் பிறகு தான் அமைதியானாராம் ரஜினி. ஆனால் படம் வெளியாகி தமிழக அரசுக்கான சிறந்த படத்திற்கான விருதையும் சிறந்த நடிகருக்கான விருதை ரஜினியும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Cook with…
சர்ச்சை நாயகன்…
Ajith Vijay:…
OTT-யில் புதிய…
சிம்புவுடன் இணைந்த…