Categories: Cinema News latest news

ரஜினி கொடுத்த ‘அந்த’ ஷாக்.! மீள முடியாமல் தவித்த கமலின் ஃபேவரைட் நடிகர்.!

தமிழ் சினிமாவில் நல்ல ஒரு நடிக்க கதயநாயகர்கள் சில சமயம் ரசிகர்கள் வெளிச்சத்திற்கு வர காலதாமதமாகும். அதே போல் தான் மற்ற கலைஞர்களும் சிலருக்கு அந்த விஷயம் விரைவில் நடந்துவிடும். சிலருக்கு காலதாமதமாகும்.

அப்படி ஒரு குணசித்ர நடிகர் தான் எம்.எஸ்.பாஸ்கர். இவர் ஆரம்பத்தில் சீரியல் நடிகராக இருந்து, காமெடி வேடத்தில் நடித்து வந்து, அடுத்து தான் குணச்சித்திர வேடத்தில் கலக்கி வருகிறார். இவரை பற்றி நடிகர் கமல்ஹாசன் பல பேட்டிகளில், மேடைகளில் புகழ்ந்துள்ளார். தனக்கு மிகவும் பிடித்த, தமிழ் சினிமா கொண்டாட தவறிய நடிகர்களில் இவர் முக்கியமானவர் என எம்.எஸ்.பாஸ்கரை கூறுவார் கமல்ஹாசன்.

இவர் கமலுடன் உத்தம வில்லன் படத்தில் சொக்கு எனும்  கதாபாத்திரத்தில் நடித்த காட்சிகள் இவரது நடிப்புக்கு மிக சிறந்த எடுத்துக்காட்டு. இவர் அண்மையில் ஒரு பேட்டியில் பேசும் போது, தான் கமலுடன் நடித்திருக்கிறேன்.

இதையும் படியுங்களேன் – அஜித் படம் வெற்றி தோல்வி பற்றி கவலையில்லை.! விக்னேஷ் சிவனின் அசால்ட்டான பதில்.! பீதியில் ரசிகர்கள்.!

அதே போல சிவாஜி படத்தில் ரஜினியுடன் முதன் முறையாக நடித்தேன். அப்போது, ரஜினி என்னை ஷாக் ஆக்கிவிட்டார். அவருடன் முதன் முறையாக பேச போகிறேன். திடீரென கிட்டே வந்து வாங்க பாஸ்கர் உங்களோட நடிப்பதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி என கூறவே. அண்ணா, என்ன இது, நான் உங்க கூட ஒரு பிரேமில் நிற்க மாட்டோமா என நினைக்கையில், நீங்க இப்படி சொல்லிடீங்க.

இதுக்காக தான் 20 வருஷம் காத்துட்டு இருந்தேன். என பாஸ்கர் கூறியுள்ளார். இரண்டும் ஒண்ணுதான் என அடுத்து காட்சிக்கு கிளம்பிவிட்டார். இதனை எம்.எஸ்.பாஸ்கர் மிகவும் நெகிழ்ச்சியாக தெரிவித்தார்.

Manikandan
Published by
Manikandan