Connect with us
rajini

Cinema News

‘லால்சலாம்’ படத்தில் வேதனையை கொட்டித்தீர்த்த ரஜினி! எப்படியெல்லாம் கஷ்டப்பட்டிருக்கிறார் பாருங்க

Laalsalam Movie: சூப்பர் ஸ்டாராக ரசிகர்களை இன்றுவரை மகிழ்வித்து வரும் ரஜினி தற்போது த.ச.ஞானவேல் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். கடைசியாக வெளியான ஜெயிலர் திரைப்படம் அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது.

இந்த வயசுலேயும் இளம் தலைமுறை நடிகர்களுக்கு டஃப் கொடுத்து வரும் நடிகராகவே வலம் வந்து கொண்டிருக்கிறார். ஒரு சில நடிகர்கள் தான் சினிமாவே கதி என்று இருப்பவர்கள். அதில் ரஜினி ஒரு படி மேலாக இன்னும் நடித்துக் கொண்டு வருகிறார்.

இதையும் படிங்க: சிறகடிக்க ஆசை: ஓசியில காசு கொடுத்து கடைசியில பிச்சைக்காரனா மாறிய மனோஜ்..!

இந்த நிலையில் ரஜினியின் லால் சலாம் திரைப்படம் திரைக்கு வர காத்துக் கொண்டிருக்கிறது. அந்தப் படத்தை அவருடைய மகளான ஐஸ்வர்யாதான் இயக்கியிருக்கிறார். அந்தப் படத்தின் படப்பிடிப்பில் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு லிவிங்ஸ்டனுக்கு கிடைத்ததாம்.

அப்போது ரஜினியிடம் லிவிங்ஸ்டன் ‘எப்படி சார் இந்தளவுக்கு உயரத்தை அடைந்திருக்கிறீர்கள் என்றால் 80களில் நடிக்கும் போதெல்லாம் வீட்டிலேயே இருந்திருக்க மாட்டீங்களே?’ என்று கேட்டாராம்.

இதையும் படிங்க: பாடல்களே இல்லாமல் சிவாஜி நடித்த ஒரே திரைப்படம்!.. விருதுகளை குவித்த மிஸ்ட்ரி திரில்லர்!..

அதற்கு ரஜினி ‘என் புள்ளைங்க முகத்த கூட பார்க்க நேரம் இருக்காது. ஒடிக்கிட்டே இருந்தேன். ஒரு நாள் இங்கு இருப்பேன், ஒரு  நாள் அவுட்டோர் சூட்டிங்னு கூட்டிட்டு போயிடுவாங்க. கேமிரா தான் என் மனைவி, குடும்பம்

இப்படியேதான் என் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது. வீட்டிற்கு எப்பொழுதாவது ஒரு முறைதான் வர முடியும். என் புள்ளைங்கள என் மனைவி லதாவா பாத்துக்கிட்டாங்க, அவங்கதான் வளர்த்தாங்க.

இதையும் படிங்க: புண்ணியவான் கொடுத்த ஒரு பேட்டி! என் மொத்த வாழ்க்கையும் போச்சு – விஷாலால் டோட்டல் வாஷ் அவுட் ஆன நடிகர்

குடும்பத்தை பார்த்துக் கொண்டதெல்லாம் என் மனைவி தான். நான் நடிச்சு நடிச்சு சம்பாதிக்கிறது மட்டும்தான். அப்படியே வீட்டிற்கு வந்தாலும் என் வீட்டின் சுவரில் சாயக் கூட யோசிப்பேன். ஏனெனில் செட்டில் போடப்பட்டிருக்கும் சுவர்தான் என மனதில் வந்து நிற்கும். ஒரு வேளை உடைந்து விடுமோ என்ற பயத்திலேதான் இருப்பாராம். அந்தளவுக்கு சினிமா ரஜினியிடம் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது ’ என்று கூறினார்.

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in Cinema News

To Top