Connect with us

Cinema News

சிறகடிக்க ஆசை: ஓசியில காசு கொடுத்து கடைசியில பிச்சைக்காரனா மாறிய மனோஜ்..!

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் ஸ்ருதியும், பிஜூவும் துணி எடுக்க வந்த கடைக்கு ரவி வருகிறார். அவரை பார்த்த ஸ்ருதி சந்தோஷப்படுகிறார். பிஜூவை திசை திருப்பி விட்டு ஸ்ருதியிடம் பேசலாம் என ரவி ஐடியா செய்து வருகிறார்.

வீட்டில் மனோஜை விஜயா திட்டிக்கொண்டு இருக்கிறார். இன்னும் எத்தனை நாளுக்கு தான் வேலையில்லாம சுத்துவ. சீக்கிரம் வேலையை தேடி ரோகிணி வேற சம்பள காசை கேட்பா எனக் கூறுகிறார். அப்ளே செய்யணுமா 500 காசு கொடு என்கிறார். நான் வேலைக்கா போறேன் என்கிட்ட கேட்கிற என்கிறார்.

இதையும் படிங்க: உங்க படத்தை ஓட வச்சதே நாங்கதான்…நண்பன்னு கூட பார்க்காம வெளுத்து வாங்கிய சிவாஜி…

வேணுமுனா உங்க அப்பாக்கிட்ட கேளு என மனோஜிடம் கூறுகிறார். அந்த நேரத்தில் அண்ணாமலை முத்துவிடம் 500 ரூபாயிற்கு சில்லரை வாங்குகிறார். அதில் 50 ரூபாயில் ஹார்ட்டின் போட்டு மைனா என எழுதி இருந்தது. அண்ணாமலையிடம் மனோஜ் 500 சில்லரை இருக்கா எனக் கேட்கிறார். அவரோ நானே முத்துவிடம் தான் வாங்குனேன் எனக் கூறுகிறார். இந்த 300 ரூபாயை வச்சிக்கோ எனக் கொடுத்து விட்டு செல்கிறார். விஜயாவிடம் 200 ரூபாய் வாங்கிக்கொண்டு செல்கிறார்.

அடுத்து பார்க்கில் இருக்கும் மனோஜ், அதே நேரத்தில் முத்துவும் பார்க்கிற்கு ஒரு கஸ்டமரை அழைத்து வருகிறார். அவரிடம் சில்லரை இல்லாததால் மனோஜிடம் 300 வாங்கி கொடுக்கிறார். அவர் முத்து கொடுத்த அதே 50 ரூபாயை முத்துவிடம் கொடுக்கிறார். இதனால் முத்துவுக்கு சந்தேகம் வந்து பார்க்கிற்கு வருகிறார்.

இதையும் படிங்க: சிவாஜிக்கே நடிப்பு சொல்லி கொடுத்த தளபதி.. கடுப்பான சிவாஜி என்ன செஞ்சாரு தெரியுமா?..

அண்ணாமலை இருப்பாரோ என சுற்றி பார்க்க வரும் முத்துவை மனோஜ் பார்த்து அதிர்ச்சி அடைகிறார். அவரிடம் மாட்டிக்கொள்ள கூடாது என்பதால் ஓடி ஒளிய நினைக்கிறார். உடனே ஒரு கருப்பு பெட்சீட்டை எடுத்து போர்த்து கொண்டு பிச்சைக்காரர் போல சீன் காட்டுகிறார்.

அண்ணாமலையை தேடி பார்த்துவிட்டு பிச்சைக்காரர் போல இருக்கும் மனோஜுக்கு 5 ரூபாய் போட்டுவிட்டு செல்கிறார். துணிக்கடையில் இருக்கும் ஸ்ருதி, ரவிக்கு தேங்ஸ் சொல்லுகிறார். நாம் உடனே திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனக் கேட்க ரவியும் சம்மதம் தெரிவிக்கிறார். இதனுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

google news
Continue Reading

More in Cinema News

To Top