kamal
Rajini Kamal: தமிழ் சினிமாவில் யார் யாருக்கு என்னென்ன வாய்ப்புகள் கிடைக்கும் என்பதை யாராலும் சொல்ல முடியாது. ஆனால் கிடைக்கிற வாய்ப்பை தக்க சமயத்தில் பயன்படுத்திக் கொண்டால் அவர்களின் வாழ்க்கை பிரகாசமாகிவிடும் என்பது தான் உண்மை. அந்த வகையில் ஒரு சில நடிகர்களுக்காக எழுதப்பட்ட கதையில் வேறொரு நடிகர்கள் நடிப்பதும் பின் அந்த வாய்ப்பை எண்ணி பல நடிகர்கள் வருந்துவதும் காலம் காலமாக சினிமாவில் நடக்கும் ஒரு கூத்து.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் இரு பெரும் ஜாம்பவான்களாக இருக்கும் ரஜினி கமல் குறித்து ஒரு தகவல் சமீபத்தில் சோசியல் மீடியாவில் பரவி வருகிறது. ரஜினிக்காக முழுக்க முழுக்க எழுதிய கதையில் கமல் நடித்து அதனால் பெரிய வரவேற்பை கமல் பெற்ற சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் அந்த செய்தி வைரலாகி வருகின்றது.
இதையும் படிங்க: மூக்குத்தி அம்மன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகையா? செமையா இருந்து இருக்குமே!
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் இந்தியன். அந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது ரஜினி. சங்கர் இந்த கதையை எழுதும் போது அவர் மனதில் ரஜினியை வைத்துக்கொண்டு மட்டும்தான் முழு கதையையும் எழுதி இருக்கிறார். அதன் பிறகு ரஜினியிடம் இதை போய் சொல்ல இந்த கதையில் ரஜினிக்கு அந்த அளவுக்கு ஆர்வம் இல்லையாம். அதன் பிறகு இந்தியன் படத்தை எடுத்து முடித்துவிட்டு ரஜினியை பார்க்க வரச்சொல்லி இருக்கிறார் சங்கர்.
படத்தை பார்த்துவிட்டு ரஜினி ஓடோடி வந்து சங்கரைக் கட்டி அணைத்து இப்படி ஒரு ஸ்கிரிப்ட்டை இந்த அளவுக்கு எடுப்பீர்கள் என்று நினைத்தால் நான் இந்த படத்தை தவற விட்டிருக்க மாட்டேன் என அவருடைய வருத்தத்தை கூறினாராம். இண்டர்வெல் பிளாக்கின் போது கமல் அவருடைய தலை முடியை ஸ்டைலாக கோதுவதும் நெடுமுடி வேலுவை தன்னுடைய வர்மக் கலையால் அவரை அடிப்பதும் என அந்த காட்சியில் மிகப் பிரமாதமாக நடித்திருப்பார் கமல்.
இதையும் படிங்க: ஆரம்பிச்சிட்டாங்க அலப்பறைய! ‘குக் வித் கோமாளி’யை கூண்டோடு காலிபண்ண இறங்கிய வடிவேலு
ஆனால் அதை ரஜினியை மனதில் வைத்துக்கொண்டு மட்டும்தான் சங்கர் எழுதியிருக்கிறார் என்பது கமலுக்கு தெரியாது. இ ருந்தாலும் அந்த காட்சியில் ரஜினியை மிஞ்சிய ஸ்டைலில் கமல் நடித்திருந்தது அவ்வளவு பிரமாதமாக இருந்தது என ஒரு பேட்டியில் சங்கர் கூறியிருக்கிறார். அதைப் போல ஷங்கரை ஒவ்வொரு முறையும் ரஜினி பார்க்கும் பொழுது முதல்வன், இந்தியன் போன்ற படங்களை தவற விட்டதற்காக அடிக்கடி வருத்தம் தெரிவிப்பதாகவும் ஷங்கர் கூறியிருக்கிறார்.
Vijay Devarakonda:…
Kantara Chapter…
STR49 :…
TVK Vijay:…
Vijay: தமிழ்…