சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்த திரைப்படம் சந்திரமுகி. ரஜினிக்கு அதற்கு முன்னர் வெளியான பாபா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதனால் மூன்று வருடம் கழித்து தான் சந்திரமுகி திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.
இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராக உள்ளது. இந்த இரண்டாம் பாகத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்க உள்ளார்.
சந்திரமுகி படத்தின் தலைப்பு உரிமை, அப்படத்தை தயாரித்த சிவாஜி புரெடக்ஷனிடம் இருந்ததாம். அவர்களிடம் இருந்து சுமார் ஒரு கோடி ரூபாய் விலை கொடுத்து லைகா நிறுவனம் இந்த பட தலைப்பை வாங்கியுள்ளதாம்.
இதையும் படியுங்களேன் – பிரபல சேனல் அதிகாரி என்னை தனி அறைக்கு அழைத்தார்.! நடிக்கையின் அந்த ‘திக்’ நிமிடங்கள்…
லைகா நிறுவனம் அண்மையில் தான் சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படத்தை, சிவகார்த்திகேயனுடன் இணைந்து தயாரித்து இருந்தது. அதன் மாபெரும் வெற்றியை தொடர்ந்து லைகா நிறுவனம் அடுத்தடுத்த படங்கள் தயாரித்து வருகிறது. தற்போது லைகா கைவசம் பல்வேறு திரைப்படங்கள் உள்ளன.
நடிகரும் தவெக…
TVK Karur:…
Vijay TVK…
ரங்கராஜ் முகத்திரை…
TVK Vijay:…