Connect with us
deva

Cinema News

ரஜினியை சாதாரணமா நினைச்சிட்டு இருக்காங்க! அவர் வாய்முகூர்த்தம் – இப்ப வரைக்கும் நடக்குது – நெகிழ்ச்சியில் தேவா

தமிழ் சினிமாவில் தேனிசைத் தென்றலாக திகழ்ந்து வருபவர் இசையமைப்பாளர் தேவா. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் கோலோச்சி வருகிறார். தமிழ் உட்பட தெலுங்கு,  மலையாளம், கன்னடம் என பிற மொழி படங்களிலும் தன்னுடைய  இசைத்திறமையை நிரூபித்தவர்.

கானா பாடல்களை இசைப்பதில் மிகவும் வல்லவரான தேவா பல பாடல்களை தானே பாடி இசையமைக்கவும் செய்திருக்கிறார். இவர் பாடல்கள் பெரும்பாலும் சென்னைத் தமிழிலேயே அமைந்திருக்கும். மேற்கத்திய இசையிலும் கைதேர்ந்தவராக இருக்கிறார்.

இதையும் படிங்க : ராமராஜன் பேர சொன்னதும் கடுப்பாகி எழுந்து போன கவுதமி!.. அப்படி என்னம்மா நடந்துச்சி!…

இன்று ரஜினியை சூப்பர் ஸ்டாராக கொண்டாடும் ரஜினிக்கு ஒரு வாழ் நாள் முழுக்க மறக்க முடியாத ஒரு பிஜிஎம்மை கொடுத்த பெருமை தேவாவையே சேரும். பாட்ஷா படத்தில் அமைந்த பாடல்களும் சரி பிஜிஎம்மும் சரி இதுவரை எந்த இசையமைப்பாளராலும் அதை ஓவர் டேக் செய்ய முடியவில்லை.

அதுமட்டுமில்லாமல் அண்ணாமலை படத்திற்கும் தேவாதான் இசையமைத்திருந்தார். இன்றைய காலகட்டத்தில் எப்படி ரஜினியின் படங்களுக்கு அனிருத் வழக்கமாக இசையமைத்துக் கொண்டிருக்கிறாரோ அதே போல் 90களில் ரஜினியின் கெரியரில் மிக திருப்புமுனையாக அமைந்த படங்களுக்கு தேவாதான் இசையமைத்திருந்தார்.

இந்த நிலையில் ரஜினியை பற்றி ஒரு பேட்டியில் தேவா சில விஷயங்களை பகிர்ந்தார். அதாவது ரஜினி வாழ்க்கையை சமப்படுத்திக் கொண்டார் என்றும் ஒரு பக்கம் ஆன்மீகம் ஒரு பக்கம் தொழில் என தன்னை மேம்படுத்திக் கொண்டார் என்றும் கூறினார்.

இதையும் படிங்க : அடுத்த சூப்பர்ஸ்டார் இல்லைங்க!.. அடுத்த உலக நாயகனாகவே ஆகப் போகும் விஜய்!.. விளங்குமா?..

அதுமட்டுமில்லாலம் ஜெய்லர் படத்தை முடித்த கையோடு இமயமலை சென்று விட்டார் அல்லவா? அவர் ஒரு ரிஷி. இமயமலையில் இருக்கும் ரிஷி மாதிரியானவர்தான் ரஜினி. ஒரு சமயம் என்னுடைய கலை நிகழ்ச்சிக்காக பத்திரிக்கை வைக்க போன சமயத்தில் ரஜினி என்னிடம் இதையே ஃபாலோ பண்ணுங்கள் என்றும் இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்காக இறைவன் உங்களுக்கு அற்புதமான ரூட்டை கொடுத்திருக்கிறார். இதை விட்டு விடாதீர்கள் என்று சொன்னாராம் ரஜினி.

அவர் சொன்னதில் இருந்து ஏராளமான கலை நிகழ்ச்சிகள் நடத்திக் கொண்டிருக்கிறேன் என்றும் என்ன ஒரு மனிதர் ரஜினி என்று தேவா மெய்மறந்து கூறினார்.

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in Cinema News

To Top