Categories: Gossips latest news

ரஜினி செஞ்ச செயலால் கலங்கி நின்ற ‘பீஸ்ட்’ நெல்சன்.! நல்ல மனுஷன் சார் நீங்க…

கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து பீஸ்ட் எனும் திரைப்படத்தை நெல்சன் இயக்கியிருந்தார். முதல் இரண்டு படங்கள் நல்ல வெற்றி பெற்று அடுத்து தளபதி விஜய் போன்ற பெரிய நடிகரை வைத்து இயக்குவதால் ரஜினிக்கு கதை சொல்லும்  வாய்ப்பு எளிதில் கிடைத்து இயக்குனர் நெல்சனுக்கு.

ரஜினியும் அந்த கதையை ஓகே செய்து பீஸ்ட் பட ரிலீஸுக்கு முன்பே தலைவர்169 பட அறிவிப்பு வெளியானது. ஆனால், பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத காரணத்தால் தயாரிப்பு நிறுவனம் கொஞ்சம் ஜெர்க் ஆனது.

இதனால் தற்போது திரைக்கதையை மேம்படுத்தும் பணியில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. இதற்காக இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் திரைக்கதை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் இயக்குனர் நெல்சனை மாற்றிவிட்டு வேறு ஒரு இயக்குனரை இயக்க வைக்கலாமா என்று படக்குழு ரஜினிக்கு ஆலோசனை கூறியதாம். ஆனால், ரஜினி இதை மறுத்து விட்டாராம்.

இதையும் படியுங்களேன் – ரஜினி படத்துக்கு இவ்ளோதான் பட்ஜெட்!…சன் பிக்ச்சர்ஸ் கறார்!…என்னடா நெல்சனுக்கு வந்த சோதனை!….

ஒரு பட தோல்வியால் ரஜினி பட வாய்ப்பு அவருக்கு  கிடைக்காமல் போனால், அவரது எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். அடுத்தடுத்து படங்கள் வாய்ப்பு கிடைப்பது மிகவும் கடினமாகிவிடும். ஆதலால் திரைக்கதை பணியை மேம்படுத்தும் பணியில் ஈடுபடுங்கள் நெல்சனை மாற்ற வேண்டாம் என்று உறுதியாக சொல்லிவிட்டாராம் ரஜினி.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இந்த நெகிழ்ச்சி செயல் இயக்குனர் நெல்சனை கலங்க வைத்துவிட்டதாம். தற்போது அதற்காகவே இந்த படத்தை எப்படியும் வெற்றி படமாக கொடுத்து ரஜினிக்கும் தனக்கும் ஒரு காம்பேக் திரைப்படமாக கொடுக்க வேண்டும் என்று கடுமையாக உழைத்து வருகிறாராம் இயக்குனர் நெல்சன்.

Manikandan
Published by
Manikandan