Categories: Cinema News latest news

எனக்கு அவர் மட்டும்தான் போட்டி!.. வேற எவனும் இல்ல!.. ரஜினி கணக்கு இதுதானாம்!…

சமீப நாட்களாக சமூக வலைதளம் முழுவதும் சூப்பர் ஸ்டார் பிரச்சனை தான் ஹாட் டாப்பிக்காக உள்ளது. விஜய் படம் தான் அதிகமாக வசூல் செய்கிறது. விஜயும் அதிகமாக தான் சம்பளம் வாங்குகிறார். எனவே அவர் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சிலர் கூறியதால், விஜய் ரசிகர்களுக்கும், ரஜினி ரசிகர்களுக்கும் இடையே சமூக வலைதளங்களில் தினமும் சண்டை தான் நடக்கிறது.

அதோடு ஜெயிலர் பட ஆடியோ லாஞ்ச் விழாவில், ரஜினி சொன்ன காக்கா கழுகு கதை வேற பிரச்சனையை மேலும் பெரிதாக்கி விட்டது. தற்போது, எந்த பிரபலத்தை எங்கு பார்த்தாலும், இந்த சூப்பர் ஸ்டார் பிரச்சனை குறித்து தான் கேள்வி கேட்கப்படுகிறது. இது குறித்து பல பிரபலங்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

அடுத்து வரும் லியோ படத்தின் ஆடியோ லாஞ்ச் விழாவில், ரஜினி சொன்ன குட்டி கதைக்கு விஜய் பதிலடி கொடுப்பார் என்று பலரும் கூறி வந்தனர். இந்த நிலையில் ஜெயிலர் படத்தின் ட்ரெய்லர் வீடியோவை பார்த்துவிட்டு, இயக்குநர் நெல்சனை விஜய் பாராட்டியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க- ஜெயிலர் முத்துவேல் பாண்டியனின் குடும்பம் இதுதானாம்!.. தமன்னாவ காட்டி ஏமாத்திப்புட்டாய்ங்க!…

இந்நிலையில் இது குறித்து சமீபத்திய பேட்டியில் செய்யாறு பாலு பல விஷயங்களை தெரிவித்துள்ளார். லியோ பட ஆடியோ லாஞ்ச் மதுரையில் நடைபெறவுள்ளது. விஜய் இந்த பிரச்சனைக்கு பதிலடி எல்லாம் கொடுக்க மாட்டார். அவர் கோபத்தில் இல்லை. அதனால் தான் நெல்சனுக்கு அழைத்து வாழ்த்து கூறினார்.

லியோ பட ஆடியோ லாஞ்ச்சை அரசியல் மாநாடு போல நடத்த திட்டமிட்டு வருகின்றனர். ரஜினி கடுப்பானதற்கு காரணம் அவர் கமலை தவிர வேறு யாரையும் போட்டியாக கருதவே இல்லை. அதனால் தான், விஜயோடு ஒப்பிட்டு பேசியதால் கடுப்பாகி அந்த கதையை சொன்னார். மற்றபடி அவரும் இந்த பிரச்சனையை பெரிதாக்க நினைக்கவில்லை என்று செய்யாறு பாலு அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க- தலைவர் 170 படத்தில் மேலும் ஒரு சூப்பர் ஸ்டார்!. அப்ப கண்டிப்பா இது பேன் இந்தியா படம்தான்!..

prabhanjani
Published by
prabhanjani