×

ரஜினி கட்சியில் சேர திட்டமா ? ராஜேந்திர பாலாஜி நீக்கத்தின் பின்னணி என்ன ?

அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விருதுநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டது குறித்தான பின்னணி வெளியாகியுள்ளது

 

சமீப காலமாக சர்ச்சைக்குள்ளான பேச்சுக்களை பேசி அதன் மூலம் கட்சிக்குள் சலசலப்பை உருவாக்கி வருபவர் அதிமுகவின் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிஇந்நிலையில் அவர் வகித்து வந்த விருதுநகர் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து ராஜேந்திர பாலாஜி விடுவிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் .பன்னிர் செல்வம் நேற்று அறிவித்துள்ளனர்

அவரது பதவி பறிப்புக்கான காரணங்களாக பல கருத்துகள் சொல்லப்பட்டு வருகின்றனர். அதில் முக்கியமான ஒன்றாக, ரஜினியின் மக்கள் மன்றத்தினருடன் ராஜேந்திர பாலாஜி ரகசியத்தொடர்பில் இருந்ததாகவும், ரஜினி கட்சி ஆரம்பித்தால் உறுப்பினர்களோடு அங்கு சென்று சேர முயற்சித்ததுமே காரணம் என சொல்லப்படுகிறது. சமீபகாலமாக ரஜினியின் பேச்சுகளுக்கு அவர் ஆதரவு தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News