Categories: Cinema News latest news throwback stories

சூப்பர்ஸ்டார் பட்டத்தை ரஜினிக்கு தூக்கி கொடுத்த பிரபலம்!… இப்படி தான் இந்த விஷயம் நடந்துச்சாம்!

Rajinikanth: தமிழ் சினிமாவில் இந்த சூப்பர்ஸ்டார் பஞ்சாயத்து மட்டும் ஓயவே இல்லை. அடிக்கடி அந்த பேச்சு எழுந்து கொண்டு இருந்த நிலையில் இந்த டைட்டில் ரஜினிக்கு எப்படி கிடைச்சது. அதுக்கு அவர் என்ன சொன்னார் என்ற தகவலை பிரபல விமர்சகர் டாக்டர் காந்தராஜ் தன்னுடைய பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

அவர் பேட்டியில் இருந்து, ரஜினிகாந்த் சினிமாவில் தொடங்கும் போது அவருக்கு பெரிய எதிர்ப்புகள் இல்லை. அந்த சமயத்தில் சிவாஜி, கமல் என மாபெரும் ஸ்டார்கள் இருந்தனர். அவர்களை பிடிக்காதவர்கள் ரஜினியை எளிதாக தூக்கிவிட்டனர். இதனால் அவர் சினிமாவில்  கஷ்டப்பட்டதாக கூறுவது என்னவோ சரியில்லை.

இதையும் படிங்க: பத்திக்கிட்டு எறியும் கோலிவுட் நெப்போட்டிசம்!… தனுஷின் மகனும் களமிறங்குகிறாரா? ஷாக் தரும் பிரபலம்…

அதுப்போல அவருக்கு சினிமா கேரியரின் தொடக்கத்திலேயே காதல் தோல்வி நடந்தது. அதில் இருந்து விடுப்படும் போது தான் லதாவை பார்த்து அவர் மீது மையல் கொள்கிறார். தன்னுடைய பழைய காதலி போல இருப்பதால் உடனே லதாவை காதலித்து விடுகிறார். அவர்கள் திருமணம் ரொம்பவே எளிமையாக இருந்தது.

வேறு யாருக்குமே அவர் அழைக்கவில்லை. ஆனால் அமலாவுக்கும் ரஜினிக்கும் காதல் இருந்ததாக கூறுவது உண்மையில்லை. அவர்கள் ஜோடி பொருத்தம் அந்த படத்துக்கு தேவைப்பட்டது. அது படத்தின் விளம்பரத்துக்காக செய்ததாக மட்டுமே இருக்கும். அதுப்போல அவருக்கு சூப்பர்ஸ்டார் பட்டம் வந்த உடனே கொடுக்கவில்லை.

இதையும் படிங்க: தலைவன் வேற ரகம்! இன்னும் காஷ்மீரில் குளிர்காயும் அண்ணாச்சி.. மாத்தியோசி ஸ்டைலில் வைரலாகும் வீடியோ

இருந்தும் பைரவி படத்தினை விட 16 வயதினிலே படம் தான் நட்சத்திர அந்தஸ்த்து கிடைத்தது. அவர் ரோல் அந்த படத்தில் மிகப்பெரிய பாராட்டை பெற்றது. ரஜினியும் சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்துக்கு பெருமை சேர்த்தார். பத்திரிக்கையாளர்களும் அவரை கொண்டாடியது எனவும் குறிப்பிட்டார்.

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily