Connect with us

Cinema News

எம்.ஜி.ஆர் மாநாட்டுக்கு சென்று செம அடி வாங்கிய ரஜினிகாந்த்… அப்போதே ஏழாம் பொருத்தம் ஆரம்பிச்சிட்டோ?

Rajinikanth: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சினிமா வருவதற்கு முன்னரே தன் நண்பர்களுடன் இணைந்து நிறைய சம்பவம் செய்து இருக்கிறார். அதை கேட்கும் போதே அட இவர் உண்மையிலே நடிகர் தான் பாஸ் எனச் சொல்லும் அளவுக்கு மாஸ் காட்சிகளுடன் இருக்கும். ஆனால் அதில் சில சொதப்பல் நடந்த தருணமும் இருக்கிறதாம்.

கோலிவுட்டில் ரஜினிகாந்த் ஹீரோவாக அறிமுகமாகி பல படங்களில் நடித்து சில சர்ச்சையில் சிக்கினார். அப்படி அவர் நடிகை ஒருவரை காதலித்து அதில் ஏற்பட்ட பிரச்னையால் எம்.ஜி.ஆரிடம் அடி வாங்கியதாக ஒரு தகவல் கோலிவுட் வட்டாரத்தில் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: ரஜினிகாந்தின் இன்டஸ்ட்ரி ஹிட் படங்கள் என்னென்ன?.. வசூல் எவ்வளவு தெரியுமா?

ஆனால் அது உண்மையா இல்லையா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை. இருந்தும் சிவாஜியுடன் ரஜினிகாந்த் நெருக்கம் காட்டிய அளவு எம்.ஜி.ஆருடன் காட்டியதே இல்லை. இருவருக்குமே ஏழாம் பொருத்தம் என்பது அவர் நடிக்க வரும் முன்னரே முடிவாகிவிட்டது போல. 

ஒருநாள் எம்.ஜி.ஆர் அதிமுக கட்சியை தொடங்கிய பின்னர் அமைந்தக்கரையில் முதல் பொதுக்கூட்டத்தினை நடத்தி இருக்கிறார். ரஜினிகாந்துடன் அவரின் திரைப்பட கல்லூரி நண்பர்கள் மூவர் இணைந்து கொள்கின்றனர். நால்வரும் லுங்கிகளில் பொதுக்கூட்டத்துக்கு வந்திருந்தனர். எம்.ஜி.ஆரின் புகழுக்கு அப்போதே கூட்டம் அலைமோதுகிறது.

ஆனால் அவர் பேச தொடங்கிய சில நொடிகளில் கூட்டத்தில் இருந்து சிலர் கற்களை எறிந்தனராம். இதனால் அங்கிருந்தவர்கள் சிதறி ஓடிவிட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு உருவாகியது. போலீசாரும் வேறு வழி இல்லாமல் லத்தி சார்ஜ் செய்ய தொடங்கினார்களாம்.

இதையும் படிங்க: முதல் சிங்கிள் ஷாட் ஹீரோவாக சிவாஜி மாறியது இப்படித்தான்!.. நடிகர் திலகம்னா சும்மாவா!

ரஜினி நண்பர்கள் தப்பித்துவிடலாம் என ஓடிவிட்டனராம். ஆனால் ரஜினி போலீசாரிடம் வசமாகி சிக்கி கொள்கிறார். ஆனால் பயப்படாமல் தமாஷாக நினைத்துக்கொண்டு சும்மா வந்தேன் சார் என்றாராம். இருந்தும் கருத்த உருவத்தில் லுங்கியுடன் நிற்கும் ரஜினியை பார்த்தால் கலவரம் செய்ய வந்தவர் போல இருந்ததாம்.

இதனால் கடுப்பான போலீசார் லத்தியால் அவரை முதுகில் ஓங்கி அடித்துவிடுகின்றனர். உடனே அங்கிருந்து தப்பி அவர் தங்கி இருந்த ஹோட்டல் அறைக்கு வந்துவிடுகிறார். நண்பர்களிடம் நடந்ததை கூற முதுகில் சட்டையை விலக்கி பார்த்தால் அவர் நிறத்தை மீறி ரத்தம் கட்டி போய் இருந்ததாம். ஆரம்பமே பிரச்னை தான் போல.

இதையும் படிங்க:  500 ரூபாய் சம்பளத்துக்கு வேறு நடிகருக்கு குரல் கொடுத்த சிவாஜி!.. அதுதான் முதலும் கடைசியும்!..

Continue Reading

More in Cinema News

To Top