
Cinema News
மூன்று முடிச்சு படத்தில் ரஜினி சொன்ன பொய்… குருநாதருக்காக உயிரை விட துணிந்த ஆச்சரியம்…
Published on
By
Rajinikanth: ரஜினிகாந்துக்கு தன்னுடைய ஆசான் பாலசந்தர் மீது அத்தனை மரியாதை. அவர் சொல்வதற்கு எதிர் பேச்சே பேசமாட்டாராம். அப்படி இருக்க அவருக்காக மூன்று முடிச்சு படத்தில் இரண்டு பொய் சொல்ல போக அது அவர் வாழ்க்கையே போகும் நிலைக்கு தள்ளியதாம்.
கே.பாலசந்தர் இயக்கத்தில் உருவான திரைப்படம் மூன்று முடிச்ச. இப்படத்தில் ரஜினியுடன் கமல் மற்றும் ஸ்ரீதேவி இணைந்து நடித்திருந்தனர். பாலசந்தர் கொஞ்சம் கோபக்காரர் என்பதால் அவர் சொல்வதை தட்டாமல் செய்வாராம் ரஜினிகாந்த். அப்படி படப்பிடிப்பில் ரஜினியிடம் உனக்கு கார் ஓட்ட தெரியுமா எனக் கேட்டு இருக்கிறார்.
இதையும் படிங்க: இந்த படத்தை வச்சி விஜயை தூக்கணும்!.. காலம் போன காலத்துல கணக்கு போடும் விஷால்!..
கண்டக்டராக இருந்த ரஜினிக்கு நான்கு சக்கர வாகனங்கள் ஓட்டவே தெரியாதாம். ஆனால் தனக்கு டிரைவிங் தெரியாது என்று சொன்னால் அப்பட வாய்ப்பு மறுக்கப்பட்டு விடுமோ என்ற பயத்தில் தெரியும் என்று கூறிவிட்டார். இதனை நம்பிய பாலசந்தர் ரஜினி கார் ஓட்டி வருவது போல ஒரு காட்சியை வைத்தாராம்.
ஏற்காட்டில் ரஜினி காரை ஓட்டிக்கிட்டு கேமராவை பார்த்து வர வேண்டும். காருக்குள் ரஜினி ஏறும்போதே எது ப்ரேக், எது க்ளட்ச் என்பதை டிரைவரிடம் கேட்டுக்கொண்டு ஏறி உட்கார்ந்தாராம். பதற்றத்துடன் தொடங்கினாலும் அசராமல் வேகமாக காரை ஓட்டி இருக்கிறார்.
இதையும் படிங்க: வெற்றித்துரைசாமிக்கும் அஜித்துக்கும் அப்படி என்ன நெருக்கம்? ஓடோடி வந்ததன் காரணம்
இருந்தும் நிலைதடுமாறிய கார் ஒரு பாறையில் முட்டி நின்றதாம். நல்ல வேலையாக மேலே பறந்து இருந்தால் 150 அடி பள்ளத்துக்குள் தான் சென்று இருக்க வேண்டும். பாறையில் மோதிய வேகத்தில் ரஜினி மயங்கிப் போனார். பாலசந்தர் ஓடிவந்து முதலுதவி செய்ய ஓட்ட தெரியாதுன்னு சொல்லி இருக்கலாமே என்றாராம்.
இதே படத்தின் ஷூட்டிங்கில் பாலசந்தர் நீச்சல் தெரியுமா என்றாராம். அதுக்கு ரஜினி தெரியும் சார் என்கிறார். அதே பொய் தான். ஏரியில் விழுந்த குழந்தையை காப்பாத்தணும் என்பது தான் காட்சி. ரஜினி பதற்றத்துடன் நிற்கிறார். பாலசந்தர் ஆக்ஷன் சொன்ன மூன்றாம் முறை அசட்டு தைரியத்தில் குதித்தாராம். அடுத்த கணமே படக்குழு இதுவும் அவருக்கு தெரியாது என அவர் உயிரை காப்பாற்ற ஓடியது தான் மிச்சம்.
இதையும் படிங்க: அடுத்த ராஜமவுலி நான்தான்டா!.. மார்க்கெட் போன பின்னாடி மகாபாரதம் எடுக்கும் லிங்குசாமி!…
Pradeep Ranganathan: கோமாளி படம் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே படம் மூலம் ஹீரோவாகவும் வெற்றி பெற்றார்....
Hariskalyan: இந்த வருட தீபாவளிக்கு என்னென்ன திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன என்பதை பற்றிய தகவல் தான் இந்த செய்தியில் நாம் பார்க்க...
STR49: முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தாலும் மற்ற நடிகர்களை போல தொடர்ந்து நடிக்கும் நடிகராக சிம்பு இல்லை. திடீரென்று ஒரு ஹிட்...
Biggboss: விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சி. கடந்த 8 சீசன்களாக இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் பெரும்...
Pradeep: கோமாளி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி ரசிகர்களிடம் பிரபலமானவர் பிரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவி, யோகி பாபு ஆகியோர் முக்கிய...