Categories: Cinema News latest news

இந்தியன் 2வில் ரஜினியை இத்தனை இடங்களில் பொளந்துட்டாரே கமல்!.. ப்ளூ சட்டை மாறன் ஆரம்பிச்சிட்டாரே!..

சிஸ்டம் சரியில்லைன்னு சொல்வாங்க ஆனால், ஒரு துரும்ப கூட கிள்ளிப் போட மாட்டாங்க என ஷங்கர் வைத்த வசனத்திலேயே ரஜினிகாந்தை போட்டு பொளந்துட்டாங்க என இந்தியன் 2 டிரெய்லர் வெளியானதும் தனது வன்ம கலையை இறக்கி விட்டார் ப்ளூ சட்டை மாறன்.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், எஸ்.ஜே. சூர்யா, நெடுமுடி வேணு, பாபி சிம்ஹா, விவேக், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடிக்க அனிருத் இசையில் இந்தியன் 2 படம் உருவாகி இருக்கிறது. அதன் அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த டிரெய்லர் தற்போது வெளியாகி இருக்கிறது.

இதையும் படிங்க: அதர்வா முரளி தம்பிக்கு ஜோடியான அதிதி ஷங்கர்!.. பில்லா இயக்குநர் படத்தோட டைட்டில் தெரியுமா?..

கமல்ஹாசனை வைத்து ஐ மற்றும் தசாவதாரம் படங்களை சேர்த்து எடுத்து வைத்தது போல ஷங்கர் ஏதோ ஒரு விஷயத்தை இந்தியன் 2 படமாக உருவாக்கி இருக்கிறார். ஆனால், இதில், சம்பவம் என்னவென்றால் பல இடங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை புரட்டிப் போட்டு பொளந்தது தான் என்கின்றனர்.

எந்திரன் படத்தில் வருவது போல ஏகப்பட்ட துப்பாக்கிகளுடன் கார்ட்டூன் கதாபாத்திரம் சித்தார்த்தை சுடும் காட்சியிலும் ரஜினிகாந்தை ட்ரோல் செய்துள்ளனர் என்கின்றனர். அதே போல எஸ்.ஜே. சூர்யாவை காட்டும் காட்சிகளிலும் ரஜினிகாந்தை தான் அந்த கதாபாத்திரத்துக்கு இன்ஸ்பிரேஷனா எனக் கேட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: பல கெட்டப்புகளில் கலக்கும் உலக நாயகன்!. சும்மா அடிப்பொலி!.. இந்தியன் 2 டிரெய்லர் வீடியோ இதோ!…

எல்லாவற்றுக்கும் மேலாக, ‘சிஸ்டம் சரியில்லைனு வாய் கிழிய பேசுவோம். ஆனா அதை தடுக்க ஒரு துரும்பை கூட கிள்ளிப்போடுறது இல்ல’ தலைவர் தாக்கப்பட்டார் என ப்ளூ சட்டை மாறன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு ரஜினிகாந்த் ரசிகர்களை காண்டாக்கியுள்ளார்.

ஆனால், அதே சமயம் இந்த படமே ரஜினி ரசிகர்களுக்கான ட்ரோல் மெட்டீரியல் படம் தான் என்றும் படம் பெரிதாக வசூல் செய்யாமல் மண்ணைக் கவ்வப் போகிறது என ரஜினி ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: இதுக்கு முன்னாடி வந்து என்ன செஞ்சாங்க? விஜய் அரசியலில் இருக்கும் பவரே வேற.. பொங்கிய ஷியாம்

Saranya M
Published by
Saranya M