Categories: Cinema News latest news

ஒரு படம் ஹிட் அடிச்சா இப்படியா!. வேற லெவலில் சம்பளம் கேட்கும் ரஜினி!. கையை பிசையும் தயாரிப்பு நிறுவனம்..

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெய்லர் படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இதனால் ரஜினி தரப்பு செம குஷியாக இருக்கின்றனராம். இனி எடுக்கும் எல்லா கதைகளிலும் அதிக கவனம் செலுத்தும் முடிவில் இருக்கிறாராம். அதேவேலையில், ஜெய்லர் படத்தால் தன்னுடைய சம்பளத்தினையும் எக்கசக்கமாக அதிகரித்து இருக்கிறாராம்.

தமிழ் சினிமாவில் நாயகர்களின் சம்பளம் 100 கோடியை அதிகாரப்பூர்வமாக தாண்டி விட்டது. இதில் விஜய் வெகுசில படங்களாகவே 120 கோடிக்கு அதிகமாக சம்பளம் வாங்கி வருகிறார். இதுப்போலவே ரஜினிகாந்தும் 100 கோடி வரை சம்பளம் வாங்கி வந்தார். அவருக்கு சென்னை ரைட்ஸ் கூட கொடுக்கப்பட்டதாக ஒரு தகவல்கள் இருக்கிறது.

இதையும் படிங்க: எனக்கு பாட்டெழுதாம வெளிய போக முடியாது!. கண்ணதாசனை அறையில் பூட்டிய எம்.ஜி.ஆர்….

ஆனால் அவரின் தர்பார் படம் விமர்சன ரீதியாக பெரிய அளவில் விமர்சிக்கப்படவில்லை. வசூலும் ஒரு அளவுக்கு தான் இருந்தது. ஆனால் சிவா இயக்கத்தில் அடுத்து உருவான அண்ணாத்த திரைப்படம் மிக மோசமான தோல்வியை சந்தித்தது. இந்தி சீரியல் எனக் கூட சில கூட்டம் விமர்சித்தனர். ரஜினி வைத்து அழுகாச்சி சீன் எடுத்ததற்கே இயக்குனர் சிவா மீது கொலை காண்டனர் அவர் ரசிகர்கள்.

இதையடுத்து அவரை ஜெய்லர் படத்துக்கு புக் செய்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் அண்ணாத்த திரைப்படம் ப்ளாப்பு சார். அதனால் சம்பளத்த குறைச்சிடுங்க என வலுக்கட்டாயமாக அவருக்கு 80 கோடிக்குள் தான் சம்பளமே கொடுத்ததாக தகவல்கள் தெரிவித்தது. தற்போது அந்த நிறுவனத்தின் நினைப்புக்கு எதிராக படம் மிகப்பெரிய வசூல் வேட்டையை தொடர்ந்து நடத்தி வருகிறது.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் படத்துக்கு வசனம் எழுத மறுத்த கலைஞர்!.. அப்புறம் நடந்ததுதான் மேஜிக்!…

ஏற்கனவே ஞானவேல் இயக்கத்தில் தற்போது லைகா ப்ரோடக்‌ஷன் தயாரிப்பில் பழைய சம்பளத்திலேயே தலைவர்170ல் படத்தில் புக்கானார். அந்த படத்தில் அமிதாப் பச்சன், பகத் பாசில், மஞ்சு வாரியர் ஆகியோர் நடிக்க இருக்கின்றனர். கிட்டத்தட்ட இந்த படத்தின் கதை போலீஸ் போலி எண்கவுண்டரை மையமாக வைத்து உருவாக்கப்பட இருக்கிறது. இப்படமும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கிறது.

இந்நிலையில், இப்படத்தினை தொடர்ந்து 171வது படத்தில் லோகேஷ் கனகராஜ் ரஜினியை இயக்க இருக்கிறார். இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அந்த படத்தினை தயாரிக்க இருக்கிறது. இப்படத்திற்கு தனக்கு 120 கோடி ரூபாய் சம்பளமாக வேண்டும் என ரஜினிகாந்த் தரப்பில் இருந்து கறார் காட்டி இருக்கின்றனர். நல்லா இல்லனு குறைச்சீங்களா இப்போ பெரிய வசூல் தந்து இருக்கேன்ல பெரிய சம்பளம் கொடுங்க எனக் கூறி இருக்கின்றனர்.

ஜெய்லர் படத்தின் வெற்றியை தொடர்ந்து சமீபத்தில் கலாநிதி மாறன் ரஜினிக்கு 100 கோடி ரூபாய் காசோலையுடன் 1.25 கோடின் ரூபாய் மதிப்பிள்ள பிஎம்டபுள்யூ எக்ஸ்7ஐ பரிசாக கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily