×

மாஸ் பக்கா மாஸ்...பட்டைய கிளப்பும் ரஜினி.. ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ டீசர் வீடியோ... 

டிஸ்கவரி சேனலில் ’மேன் வெர்சஸ் வைல்ட் - Into the wild’ என்ற நிகழ்ச்சி மிகவும் புகழ்பெற்றது.
 

இந்நிகழ்ச்சியில் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, பிரதமர் மோடி உள்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிகழ்ச்சியை பிரபல பியர் கிரில்ஸ் நடத்துகிறார்.

இந்த நிகழ்ச்சியில் கடந்த ஜனவரி மாதம் நடிகர் ரஜினி கலந்து கொண்டார். கர்நாடக மாநிலம் மைசூர் அருகே உள்ள பந்திபுரா புலிகள் காப்பகத்தில் இந்த இந்த ஆவணப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி விரைவில் டிஸ்கவரி தமிழ் சேனலில் வெளியாகவுள்ளது. இது தொடர்பான ஃபர்ட் லுக் டீசர் வீடியோவை சில நாட்களுக்கு முன்பு பியர் கிரில்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்நிகழ்ச்சி தமிழ் டிஸ்கரிசேனலில் வருகிற மார்ச் மாதம் 23ம் தேதி இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்நிகழ்ச்சி தொடர்பான மற்றொரு வீடியோவை பியர் கிரில்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  இதில், அவருடன் இணைந்து ரஜினி சாகசம் செய்யும் பல காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோவை ரஜினி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News