இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கப் போகும் தலைவர் 171 திரைப்படம் நிச்சயம் லோகேஷ் சினிமா யூனிவர்ஸ் தான் என்கிற ஹாட் அப்டேட்கள் கசிந்துள்ளன.
உலகநாயகன் கமல்ஹாசனே லோகேஷின் யூனிவர்ஸ் ஐடியாவுக்கு ஒப்புக் கொண்டு விக்ரம் படத்தில் நடித்த நிலையில், ஜெயிலர் படத்தில் மல்டி ஸ்டாரர்கள் கான்செப்ட்டை ரஜினி வைக்கவே அதுதான் காரணம் என்றும் அதே போல தலைவர் 171 படத்தையும் மல்டி ஸ்டாரர் படமாக மாற்றும் முயற்சியில் தான் லோகேஷ் கனகராஜையே ரஜினிகாந்த் ஓகே சொல்லியதாகவும் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: அடுத்த மாசமே அண்ணாவோட மாசம் தான் போல!.. 1000 கோடிக்கு லம்ப்பா ஸ்கெட்ச் போட்ட விஜய்!..
லியோ படத்தில் நடிகர் விஜய் நெகட்டிவ் ஷேடில் நடித்துள்ள நிலையில், நெல்சன் இயக்கிய டார்க் காமெடிக்கே ஓகே சொன்ன ரஜினிகாந்த் நெகட்டிவ் ஷேடிலும் தலைவர் 171ல் நடிப்பார் என்றும் எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளன.
இந்நிலையில், விக்ரம் கமலையும் ரஜினிகாந்தையும் ஒரே ஃபிரேமில் கொண்டு வரும் முயற்சியை லோகேஷ் கனகராஜ் இப்ப விட்டா எப்பவும் எடுக்க முடியாது என்பதால் தீவிரமாக இரு தரப்பிடமும் பேசி அதற்கான பக்காவான திரைக்கதையை வலுவாக உருவாக்கி வருவதாக நெருங்கிய வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.
இதையும் படிங்க: எப்பா இது சகுனி ஆட்டமால இருக்கு! தந்திரக்கார டாடிதான் – ‘தளபதி68’ல் பிரசாந்த் உள்ள வர இதுதான் காரணமா?
விஜய்யின் லியோ திரைப்படமும் எல்சியூவாக இருந்தால், தலைவர் 171ல் ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் விஜய் என ஒட்டுமொத்த கோலிவுட்டையும் கொண்டு வரும் பலே ஸ்கெட்சில் லோகேஷ் கனகராஜ் தாறுமாறான வேலையை பார்த்து வருகிறாராம்.
தனக்கு கிடைத்த வாய்ப்பை வைத்து தமிழ் சினிமாவின் மார்க்கெட்டை எந்தளவுக்கு உயர்த்த முடியுமோ அந்தளவுக்கு உயர்த்தும் முடிவில் லோகேஷ் கனகராஜ் உழைத்து வரும் நிலையில், அவரது எல்சியூ ஐடியாவுக்கு முதல் நபராக ரஜினிகாந்த் பச்சைக் கொடி காட்டியுள்ளார் என்றும் மற்ற முன்னணி நடிகர்களை சம்மதிக்க வைக்க லோகேஷ் கனகராஜ் பேச்சுவார்த்தைகளை தொடங்கி உள்ளார் என்றும் கூறுகின்றனர்.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…