எப்பா இது சகுனி ஆட்டமால இருக்கு! தந்திரக்கார டாடிதான் - ‘தளபதி68’ல் பிரசாந்த் உள்ள வர இதுதான் காரணமா?

Actor Prasanth : விஜய் தற்போது தளபதி 68 படத்திற்காக தயாராகி வருகிறார். மேலும் தளபதி68 ஐ பொறுத்தவரைக்கும் விஜயை மீறி பல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதாவது வெங்கட் பிரபு மற்றும் அவர் சார்ந்த டெக்னீஷியன்களை அழைத்து லியோ படம் வெளியாகும் வரை தளபதி68 படத்தை பற்றி எந்தவொரு அப்டேட்டும் வெளிவரக் கூடாது என்று சொல்லியிருந்தார் விஜய்.

ஆனால் அவரையும் மீறி இப்போது தளபதி 68 ல் யார் யார் நடிக்கிறார்கள் என்பது வரைக்கும் நாள்தோறும் பல செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. குறிப்பாக பிரசாந்த் மற்றும் பிரபுதேவா ஆகியோர் படத்தில் நடிக்கிறார்கள் என்பது உறுதிபட தெரிகிறது. இதில் பெரிய ஆச்சரியம் ஒரு கட்டத்தில் விஜய் , அஜித்துக்கு டஃப் கொடுத்த நடிகராக இருந்து இன்று விஜயுடன் எப்படி பிரசாந்த் இணைந்தார் என்பதுதான்.

இதையும் படிங்க; லியோ செகண்ட் சிங்கிள் வெளியாகுமா?!.. எல்லாமே அவர் கையில்தான் இருக்காம்!.. பரபர அப்டேட்…

ஆனால் இதற்கு பின்னாடி ஒரு பெரிய மாஸ்டர் ப்ளானே இருக்கிறதாம். அதாவது ஆரம்பகாலங்களில் இருந்து இன்று வரை பிரசாந்தின் எல்லா விஷயங்களிலும் தியாகராஜனின் தலையீடுதான் அதிகமாகவே இருக்கிறது. இந்தப் படத்திற்கும் அவரின் ஆலோசனைப் படியே பிரசாந்த் உள்ளே வந்திருக்கிறாராம்.

அதாவது தெலுங்கில் பல கேரக்டர் ரோல் பிரசாந்த் செய்திருந்தாலும் தமிழில் விஜய்க்கு அண்ணனாகவோ அல்லது தோழனாகவோ நடித்தால் மக்கள் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஏனெனில் இப்பொழுது வரைக்கும் பிரசாந்திற்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் இருந்து கொண்டுதான் இருக்கின்றன.

இதையும் படிங்க: ரஜினி, விஜய், அஜித் கிட்ட இல்லாத பணமா!.. மக்கள் கிட்ட இன்னும் எவ்ளோதான் சுரண்டுவீங்க!.. நியாயமா விஷால்?..

அப்படி இருக்கும் போது இந்தப் படத்தில் என்ன மாதிரியான ரோல்? ஏன் திடீரென இப்படி ? என்ற பல கேள்விகளை ரசிகர்களிடம் எழுப்புகின்றது. விஜய் தற்போது உச்சத்தில் இருக்கும் நடிகர். அவருடன் பிரசாந்த் நடிக்கும் போது விஜய்க்கு நிகரான ஒரு கேரக்டராகத்தான் இருக்கும்.

இந்த ஒரு இமேஜை வைத்து பிரசாந்த் நடித்து இன்னும் ரிலீஸாக முடியாமல் தவிக்கும் அந்தகன் படத்திற்கு ஒரு ப்ரோமோஷன் மாதிரி தளபதி68 படம் அமையும் என்பதால் கூட இந்த படத்தில் நடிக்க தியாகராஜன் சம்மதம் தெரிவித்திருப்பார் என்று கூறப்படுகிறது. அதோடு பிரசாந்த் நடிக்க வேண்டும் என்றால் சில கண்டீசன்களையும் போட்டிருக்கிறாராம் தியாகராஜன்.

இதையும் படிங்க: பாக்ஸ் ஆபிஸ் தெறிக்குது.. வார நாட்களிலும் குறையாத கூட்டம்!.. ஜவான் 5ம் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?..

அதாவது பிரசாந்த் நடிக்கும் எந்த காட்சிகளையும் எந்தவொரு காரணத்திற்காகவும் நீக்கிவிடக் கூடாது என்றும் 30 நாள்கள் கால்ஷீட் கொடுக்கிறார் என்றால் அந்த 30 நாள்கள் என்னென்ன நடித்தாரோ அதெல்லாம் படத்தில் இருக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறாராம் தியாகராஜன்.

 

Related Articles

Next Story