Connect with us
rajini

Cinema News

என்னதான் வாழ்க்கையே கொடுத்தாலும் பிடித்த இயக்குனர் அவர்தானாம்!.. பாலச்சந்தரிடமே சொன்ன ரஜினி….

Actor Rajini: தமிழ் சினிமாவுக்கே பெருமை சேர்க்கும் வகையில் இன்று உச்சம் தொட்டு இருப்பவர் நடிகரும் சூப்பர் ஸ்டாருமான ரஜினிகாந்த். வில்லனாக நடிக்க ஆசைப்பட்டவரை இந்த சினிமா ஹீரோவாக்கி அழகுப் பார்க்கிறது. தமிழ் சினிமா கொண்டிருந்த மரபுகளை முற்றிலுமாக மாற்றியவர் ரஜினி.

சர்வதேச சினிமா காரர்கள் நம் சினிமா கொண்டிருந்த அந்த மரபுகளை வசைபாடிக் கொண்டிருந்த காலம். ஆரம்பத்தில் சினிமாவில் ஹீரோவாக நடிக்க வேண்டுமென்றால் அழகான தோற்றம், மாநிறம் இருக்கிறவர்கள் மட்டுமே முதலில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அப்படிப்பட்டவர்கள் தான் ஜெயிக்கவும் செய்தார்கள்.

இதையும் படிங்க:கடுப்பில் கத்திய விஜய்… சபதம் எடுத்த பிரபல நடிகர்… எந்த படத்துலனு தெரியுமா?…

அதை வேறோடு அகற்றியவர் நடிகர் ரஜினி. ஒரு ஹீரோவாக அதுவும் உலகமே கொண்டாடும் ஒரு நடிகராக இன்று வளர்ந்து நிற்கிறார். இவர் வகுத்துக் கொடுத்த வழிதான் அடுத்தடுத்து விஜயகாந்த் , முரளி போன்றவர்களுக்கு அந்த ஹீரோ அந்தஸ்து கிடைத்தது என பிரபல கவிஞர் ஒருவர் கூறியிருக்கிறார்.

வில்லனாகவே நடித்த ரஜினி எப்படி ஹீரோவாக மாறினார் என்பதையும் அந்த கவிஞர் கூறியிருக்கிறார். கலைஞானம் அவரை பைரவி என்ற படத்தில் தான் முதன் முதலில் ஹீரோவாக அறிமுகம் செய்தார். ஆனால் ரஜினிக்குள்ளும் அந்த ஹீரோ மெட்டிரியல் இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டியவர் இயக்குனர் மகேந்திரனாம்.

இதையும் படிங்க: எல்.ஆர்.ஈஸ்வரியை வெளியே துரத்திய ஒலிப்பதிவாளர்… அப்புறம் பாடகியானது எப்படி தெரியுமா?…

முள்ளும் மலரும் படத்தில் ரஜினிக்கு அந்த கதாபாத்திரத்தை கொடுத்ததும் அதன் தயாரிப்பாளர்  ‘ரஜினியை எதுக்குய்யா இந்த கதாபாத்திரத்தில் போட்டீர்கள்? அவருக்கு பதிலாக வேறு யாரையாவது போடுங்கள்’ என்று சொன்னாராம். ஆனால் மகேந்திரன்தான் விடாப்பிடியாக ரஜினியை நடிக்க வைத்திருக்கிறார்.

Mullum Malarum

Mullum Malarum

அதே போல் அவர் இயக்கிய ஜானி படத்திலும் முதலில் ரஜினியை வேண்டாம் என சொல்லியிருக்கிறார்கள். ஆனால் ரஜினி இருந்தால்தான் நானும் இந்தப் படத்தை எடுப்பேன் என்று அடம்பிடித்து ரஜினியை நடிக்க வைத்திருக்கிறார். இப்படி ரஜினியும் ஒரு ஹீரோ மெட்டிரியல் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியவர் மகேந்திரன்.

இதையும் படிங்க: வளர்த்துவிட்டவரையே வெட்ட கூடாது… விஷால் மீது ஆவேசமாகும் தருண் கோபி… இவ்ளோ நடந்துருக்கா!…

ஒரு சமயம் ரஜினியிடம் பாலசந்தர் பேட்டி எடுக்கும் மாதிரியான ஷோவை நடத்தினார்கள். அப்போது ரஜினியிடம் ‘உன்னை கவர்ந்த இயக்குனர் மற்றும் உனக்குப் பிடித்த இயக்குனர் யார்?’என கேட்க, அதற்கு ரஜினி மகேந்திரன் பெயரை குறிப்பிட்டிருந்தார். இதை கேட்டதும் பாலசந்தர் ‘அப்போ என்னை சொல்ல மாட்டீயா’ எனக் கேட்டாராம். அப்படி ரஜினியின் வாழ்க்கையில் ஒரு முக்கிய அங்கமாக இருந்தது மகேந்திரன் என்று சொல்லப்படுகிறது.

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in Cinema News

To Top