rajini
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் தயாராகிக் கொண்டு வரும் திரைப்படம் ஜெயிலர். இந்தப் படத்தில் ரஜினி உள்பட தமன்னா, சிவராஜ்குமார் ,ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு போன்ற பல நடிகர்களும் நடித்திருக்கின்றனர். படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கின்றது. ரஜினிக்கு 169 வது படமாக அமைந்திருக்கும் இந்த ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வெளியாக இருக்கின்றது.
rajini1
ஐந்து மொழிகளில் தயாராகி வரும் இந்த ஜெயிலர் திரைப்படம் ரஜினிக்கு மிக முக்கியமான படமாக அமையும் என்று சொல்லப்படுகின்றது. ஏனெனில் அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அண்ணாத்த திரைப்படம் மக்களை திருப்தி படுத்தாத வகையில் அமைந்ததால் இந்தப் படம் வெற்றியை நோக்கி அமைய வேண்டும் என்ற ஒரு கட்டத்தில் இருக்கின்றது.
இந்த நிலையில் ஆகஸ்ட் 10ஆம் தேதி தமிழில் ரிலீஸ் ஆக உள்ள அதே நேரத்தில் கேரளாவில் இதே பெயரில் மற்றும் ஒரு படம் ரிலீஸ் ஆக உள்ளதாம். ஜெயிலர் என பெயரைக் கொண்ட அந்த மலையாள திரைப்படத்தில் நடிகர் தியான் ஸ்ரீனிவாசன் நடித்திருக்கிறாராம்.
rajini2
இரு படங்களின் பெயர்களும் ஒரே மாதிரி இருப்பதால் ரசிகர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 10ஆம் தேதி ஜெயிலர் என்ற பெயரில் ரஜினி படம் ரிலீஸ் ஆக அதே நாளில் கேரளாவில் தியான் ஸ்ரீனிவாசன் நடிக்கும் ஜெயிலர் திரைப்படமும் வெளியாக இருக்கின்றது.
அதனால் கேரளாவில் அந்த படத்தின் இயக்குனர் சஹிர் இரு படங்களின் பெயர்களும் ஒன்றாக இருக்கும் பட்சத்தில் தயவு செய்து ரஜினி நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் பெயரை மாற்றிக் கொள்ளுமாறு சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் வேண்டுகோள் விடுத்து இருந்தாராம். ஆனால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இனிமேல் ரஜினி நடிக்கும் இந்த படத்தின் பெயரை மாற்ற முடியாது என்ற முடிவில் இருக்க ஆகஸ்ட் 10ஆம் தேதி என்ன நடக்கப் போகின்றது என அனைவருமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இதையும் படிங்க : ‘விடுதலை 2’வில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் அந்த நடிகை! பைக் லேடியை விடாமல் துரத்தும் வெற்றிமாறன்
rajini3
சர்ச்சை நாயகன்…
Ajith Vijay:…
OTT-யில் புதிய…
சிம்புவுடன் இணைந்த…
வடிவேலுவின் கோபம்…