Connect with us
sethu

Cinema News

‘விடுதலை 2’வில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் அந்த நடிகை! பைக் லேடியை விடாமல் துரத்தும் வெற்றிமாறன்

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் வெளிவந்த படம் விடுதலை. இந்த படத்தை எல்ரெட் குமார் தயாரிக்க வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்தார். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய சிறுகதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் விடுதலை. படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

sethu1

sethu1

படத்தில் கூடுதல் சிறப்பாக அமைந்தது இசைஞானி இளையராஜா இசையில் இந்தப் படம் அமைந்தது தான். ஒவ்வொரு பாடல்களும் உயிரோட்டம் பெற்றவையாகவே இருந்திருந்தன. அந்த அளவுக்கு இசையை வாரி வாரி இறைத்திருப்பார் இளையராஜா. இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்ட இந்த படத்தின் முதல் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றது.

இதையும் படிங்க : உயிரே போனாலும் அதை மட்டும் செய்ய மாட்டேன்!.. படப்பிடிப்பில் தகராறு.. ஜெ.வை காப்பாற்றிய எம்.ஜி.ஆர்…

20 நாள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். அதற்க்காக சூரியும் விஜய் சேதுபதியும் தங்களை தயார் படுத்திக் கொண்டு வருகிறார்கள். இரண்டாம் பாகம் முழுவதும் விஜய் சேதுபதி காண கதையாக அமைய இருப்பதால் இன்னும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

sethu2

sethu2

இந்த நிலையில் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை மஞ்சு வாரியார் நடிக்க இருக்கிறாராம். ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் மஞ்சு வாரியார் அசுரன் திரைப்படத்தில் நடித்து அமோக வரவேற்பை பெற்றிருந்தார்.

அதுமட்டுமில்லாமல் குறிப்பிட்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் மஞ்சு வாரியார் தமிழில் நடிக்கும் மூன்றாவது படமாக இந்த விடுதலை படம் அமையும் என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே அசுரன் ,துணிவு போன்ற படங்களில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறார் மஞ்சு வாரியர்.

sethu3

sethu3

இந்த விடுதலை இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதிக்கு முக்கியத்துவம் இருப்பதால் அவருடன் சேர்ந்து ஜோடியாக நடிக்கும் மஞ்சு வாரியர்க்கும் இந்தக் கதை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க : என் வீட்டிற்கு பைக்கில் வந்தவர்கள்.. காரில் தான் செல்ல வேண்டும்- இயக்குநருக்கு கார் வாங்கிக் கொடுத்து அழகு பார்த்த விஜய்!!

google news
Continue Reading

More in Cinema News

To Top