Connect with us
Rajni2

Cinema News

சூப்பர்ஸ்டாருக்கு இப்படி ஒரு அசாத்திய திறமையா? கேட்கும்போதே புல்லரிக்குதே…!

ரஜினி படங்களுக்கு 25 ஆண்டுகளாக வேலை செய்தவர் ரஜினி ஜெயராம். அந்த அனுபவங்களை அவர் இவ்வாறு பகிர்ந்துள்ளார்.

சொந்த ஊர் சேலம் மாவட்டம் சங்ககிரி அருகில் அக்மாபேட்டை. எங்க அப்பாவுக்கு தயாரிப்பாளர், டைரக்டர் ஏ.பி.நாகராஜன் நண்பர். அவரும் எங்க ஊரைச் சேர்ந்தவர். அப்பாவுடன் சேர்ந்து படிச்சவங்க. ஒவ்வொரு படம் எடுக்கும்போது மனோரமா, சிவகுமார் எல்லாரையும் கூட்டிட்டு வருவாங்க. நாங்க போய் பார்ப்போம்.

இதையும் படிங்க… சிவாஜி சொன்னது கண்ணதாசனுக்கு அப்படியே பலித்தது.. அட அதுவா விஷயம்?!..

அப்போ எனக்கு சினிமா ஆசை வந்தது. எம்ஜிஆர், சிவாஜி படம் நிறைய பார்ப்பேன். அப்பாவோட நண்பர் மூலம் தேவர் பிலிம்ஸ்ல ஒர்க் பண்ணினேன். பாக்கியராஜ், பாண்டியராஜ் சார் படங்கள்ல ஒர்க் பண்ணினேன். கதை டிஸ்கஷன் நடக்கும்போது பார்ப்பேன். புரொடக்ஷன் வேலைகளைக் கவனிப்பேன்.

தேவர் பிலிம்ஸ்ல வேலை செய்யும் போது மேனேஜர் அம்பி மூலமா ரஜினி சாரோட அறிமுகம் கிடைச்சது. என்னைப் பற்றி எல்லாம் விசாரிச்சாரு. அப்புறம் நாளைக்கு சூட்டிங் இருக்கு. வர்ரேங்களான்னு கேட்டாரு. சரி. வர்ரேன்னு சொன்னேன். அதை நான் எதிர்பார்க்கவே இல்ல.

லதா அம்மா ‘நீங்க என்ன சம்பளம் எதிர்பார்க்குறீங்க?’ன்னு கேட்டாங்க. ‘நீங்க பார்த்து நான் வேலை செய்றதை பார்த்து தாங்க. கொடுக்கறதை வாங்கிக்கறேன்’னு சொன்னேன். அது அவங்களுக்குப் பிடிச்சது. ‘சாரைக் கேட்காம யாரிடம் எதுவும் வாங்கக்கூடாது’ன்னு சொன்னாங்க. வீட்டுல இருந்து தான் எடுத்துட்டுப் போகணும்னு சொல்வாங்க.

Rajni jayaram

Rajni jayaram

சாப்பாடு, இளநீர், சிகரெட் கூட வீட்டுல இருந்து தான் ரஜினி சாருக்கு எடுத்துட்டுப் போவேன். கம்பெனியில பேட்டா கூட வாங்கக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க. ஆனா ரஜினி சார் வாங்கிக்கோங்க. நான் லதாகிட்ட சொல்லிக்கறேன்னாரு. அப்போ 1 நாளைக்கு பேட்டா 25 ரூபா தான்.

பாண்டியன் சூட்டிங். அப்போ டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் சாரோட மனைவி இறந்துட்டாங்க. அன்னைக்கு நைட் நாங்க ஃபாரின் போறோம். அது தெரிஞ்சும் டைரக்டர் அவர் பாட்டுக்கு சூட்டிங் எடுத்துக்கிட்டே இருந்தாரு. அது லைஃப்லயே மறக்க முடியாது. முதல் முறையா எனக்கு 10 ஆயிரம் ரூபாய் அந்தப் படத்துக்காக செக் கொடுத்தாங்க.

அதையும் ரஜினி சார்கிட்ட சொல்லிட்டு தான் வாங்கினேன். அப்போ கேரவனே கிடையாது. 10 நிமிஷம் கேப் கிடைச்சாலும் மரத்தடியில தான் படுப்பாரு. தலைகாணி எல்லாம் வச்சிக்க மாட்டாரு. அவ்வளவு எளிமையான மனிதர். யாரையும் ஒரு தடவை பார்த்துட்டா கரெக்டா அவருக்கு அடையாளம் தெரியும். தூரத்துல அவங்க நின்னா கூட ‘என்னைப் பார்க்கத் தான் வந்தாங்களா?’ன்னு கேட்பார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top