மாஸ்க் இல்லாமல் ஷூட்டிங் சென்ற ரகுல் ப்ரீத்... அட இப்படியா போகணும்

செல்வராகவன் - சூர்யா கூட்டணியில் உருவான என்.ஜி.கே படத்துக்குப் பிறகு சிவகார்த்திகேயனின் அயலான், கமலின் இந்தியன் - 2 உள்ளிட்ட படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இதற்கிடையில் அஜய் தேவ்கான் நடிக்கும் மேடே படத்திலும் ஹீரோயினாக நடித்து வருகிறார்
ரகுல் ப்ரீத்சிங். இந்தப் படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடந்துவருகிறது.
ஷூட்டிங்கின்போது சமீபத்தில் இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து, தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் சிகிச்சை எடுத்துவந்த ரகுல், அதிலிருந்து வெற்றிகரமாக மீண்டு ஷூட்டிங்கிற்குத் திரும்பியிருக்கிறார்.
இவர் தற்போது மேடே ஷூட்டிங்கில் கலந்துகொண்டிருக்கிறார். தங்கியிருக்கும் ஹோட்டலில் இருந்து சொகுசு கார்களில் ஷூட்டிங்குக்குச் செல்லும்
இன்றைய ஹீரோயின்கள் மத்தியில் ஃபிட்னெஸ் ஃப்ரீக்கான ரகுல், சைக்கிளில் ஷூட்டிங் சென்று வருகிறார். மெரூன் கலர் ஹூடியுடன் ஹெல்மெட் அணிந்தபடி சைக்கிளில் ஷூட்டிங் செல்லும் வீடியோவை ரகுல், இன்ஸ்டாவில் பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.