Categories: Cinema News latest news

கையில் ஆணுறையுடன் ரகுல் ப்ரீத் சிங் – பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்!

நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடிக்கும் புதிய படத்தின் போஸ்டர் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது!

தமிழ், தெலுங்கு , இந்தி சினிமாவின் முன்னணி நடிகையான ரகுல் ப்ரீத் சிங் கன்னடத்தில் வெளியான கிள்ளி திரைப்படத்தில் நடித்து சினிமாவிற்கு அறிமுகமானார். தமிழில் தடையறத் தாக்க திரைப்படத்தில் நடித்து கோலிவுட்டிற்கு அறிமுகமானார்.

அதையடுத்து தீரன் திகாரம் ஒன்று படம் மிகப்பெரும் அளவில் ஹிட் அடித்தது. தொடர்ந்து காப்பான் , என்ஜிகே உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் தற்போது இந்தியில் சத்ரிவாலி எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது.

rahul preet sing

இதையும் படியுங்கள்: சினிமா நடிகையின் உயிரை காப்பாற்றிய சமந்தா.. நிஜமாவே உங்களுக்கு தங்க மனசுதான்!

அதில் பெரிய காண்டம் பாக்கெட் வைத்துக்கொண்டு போஸ் கொடுத்துள்ள ரகுல் ப்ரீத் சிங் பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியிருக்கிறார். தற்போது தமிழில் இந்தியன்-2, அயலான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

பிரஜன்
Published by
பிரஜன்