Categories: Cinema News latest news

கரக்காட்டக்காரன்2 வா? அடுத்த படத்தில் கண்டிப்பாக அது இருக்கும்… சீக்ரெட் சொன்ன ராமராஜன்…

Ramarajan: நடிகர் ராமராஜன் பல வருடங்கள் கழித்து சினிமாவுக்கு திரும்பி இருக்கும் நிலையில், 23 வருடங்களுக்கு பிறகு சாமானியன் படத்தில் நடித்து இருக்கிறார். விரைவில் படம் ரிலீஸாக இருக்கும் நிலையில் ராமராஜன் கொடுத்திருக்கும் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த பேட்டியில் இருந்து, நான் சினிமாவை விட்டு விலகியதே இல்லை. சரியான  கதை வராமல் இருந்ததே நான் நடிக்காமல் இருந்ததற்கு காரணம். அதுமட்டுமல்லாமல் 2010ம் ஆண்டு நான் ஒரு பெரிய விபத்தில் சிக்கினேன். அதில் இருந்து பிழைத்து நான் உயிரோடு இருப்பதே பெரிய விஷயம். அதனாலே, மீண்டும் சினிமாவில் நடிப்பேன் என நினைத்து கூட பார்த்தது இல்லை. 

இதையும் படிங்க: அந்த விஷயத்துல எம்.ஜி.ஆரும் சிவாஜியும் வேற வேற!.. சீக்ரெட் சொல்லும் நாகேஷ்…

சாமானியன் படக்கதையை ஒப்புக்கொண்டதுக்கு காரணம் அந்த படத்தின் இயக்குனர் ராகேஷ் தான். இந்த கதை இதுவரை கோலிவுட்டே சந்தித்து இருக்காத ஒரு கதை. என் காலகட்டத்திற்கு ஏற்ற கதையாகவும், அதே சமயம் இந்த கால கட்டத்துக்கு ரசிகர்களுக்கு ஏற்ற கதையாகவும் இருக்கும். 

இந்தப்படத்தின் கதையை, இந்த உலகில் பிறந்த எவரும் கிராஸ் பண்ணாமல் இருக்கவே மாட்டார்கள். இந்த படத்தினை பார்த்து விட்டு கண்ணீர் விடாமல் யாருமே போக மாட்டார்கள். இந்த படத்தில் என் ரசிகர்கள்க்கும் வருத்தம் இருக்கும். என்னை உருவாக்கியவர் இளையராஜா தான். எங்கள் இருவரின் கூட்டணியில் வந்த பாடல்கள் எல்லாம் செம ஹிட்டடித்தது.

இதையும் படிங்க:  ஜிவி பிரகாஷ்-சைந்தவி விவாகரத்தில் விஜய், ரஹ்மான் தலையிட்டது உண்மையா? உண்மையை உடைக்கும் பிரபலம்!

இந்த படத்தில் தான் ஜோடி இல்லை. அடுத்தடுத்த படங்களில் எனக்கு ஜோடிகள் இருக்கும். ரசிகர்கள் ஒப்புக்கொள்ளும்படி டூயட் கூட பாடுவேன். என்னுடைய மிகப்பெரிய ஹிட் படமான கரகாட்டக்காரன் இரண்டாம் பாகம்  வருமா எனக் கேட்கின்றனர். இயக்குனர் கங்கை அமரன் கூட இரண்டாம் பாகம் எடுக்கலாமா எனக் கேட்டார். நான் மறுத்து விட்டேன். கரகாட்டக்காரனில் எல்லாத்தையும் பார்த்துவிட்டேன். இரண்டாம் பாகத்தில் செய்ய எதுவும் இல்லை எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily