Categories: Cinema News latest news throwback stories

சினிமாவில் ரீல் ஹீரோ நிஜத்திலும் ஹீரோ தானாம்… காதலுக்காக ராமராஜன் வாங்கிய பலே பஞ்ச்… மொத்தமாக உருகிய நளினி..

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடியாக வலம் வந்தவர்கள் ராமராஜன் – நளினி தம்பதியர். 1980-90 காலகட்டங்களில் மிகப்பெரிய நட்சத்திரங்களாக இருந்த இவர்கள் நிஜ வாழ்க்கையிலும் கரம்பிடித்து வாழ்ந்து வந்தனர். நடிகர் ராமராஜன் உதவி இயக்குநராக இருந்தபோதே நடிகை நளினி மேல் ஒருதலையாகக் காதல் கொண்டிருந்தாராம். இது அரசல் புரசலாக நளினிக்கும் தெரிந்தே இருந்திருக்கிறது.

இயக்குநர் ராமராயணனின் ஷூட்டிங் ஸ்பாட்டில்தான் முதல்முறையாக நளினியை ராமராஜன் பார்த்திருக்கிறார். அப்போது முதல் காதல் கொண்டிருக்கிறார். ஆனால், அவரிடம் நேரில் சொல்லாமல் காதலித்து வந்திருக்கிறார். இந்த விவகாரம் ஒரு கட்டத்தில் நளினியின் குடும்பத்தினருக்கும் தெரிந்திருக்கிறது. அவர்கள் இந்த காதல் விவகாரத்து எதிராகவே இருந்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க: ஷங்கருக்கும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் இடையே பனிப்போரா? மீண்டும் இணையுமா இந்த வெற்றிக்கூட்டணி?

நளினி தனது சினிமா கரியரின் உச்சத்தில் அதாவது வருடத்துக்கு 24 படங்கள் நடித்துக் கொண்டிருந்த சமயத்தில் ராமராஜன் காதல் விவகாரம் பெரிதாகியிருக்கிறது. அந்த சமயத்தில் ஒருமுறை வேறொரு படப்பிடிப்பில் இருந்த நளினியைச் சந்திக்க ராமராஜன் நேரில் வந்திருக்கிறார்.

நளினியைப் பார்த்து தான் சினிமாவில் ஹீரோவாக நடிக்கப் போவதாகவும் அது தங்களுக்கு சம்மதா என்றும் கேட்பதற்காகவே வந்திருக்கிறார். ஆனால், அப்போது நளினியிடம் உதவியாளராக இருந்த ஒரு பெண் மூலமாக இந்த விவகாரம் நளினியின் குடும்பத்தினரின் காதுகளுக்குப் போயிருக்கிறது.

அத்தோடு அந்தப் படப்பிடிப்பு தளத்துக்கே நளினியின் உறவினர்கள் கூட்டமாக வந்திருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் நளினியிடம் உனக்கு என்ன பேச்சு வேண்டிக் கிடக்கிறது என்று கூறி ராமராஜனை கடுமையான சொற்களால் வறுத்தெடுத்ததோடு, அவரைத் தாக்கவும் செய்திருக்கிறார்கள். இந்த சம்பவம்தான் நளினியின் மனதைக் கரையச் செய்திருக்கிறது.

இதையும் படிங்க: இதனால் தான் விஜய் தளபதியாக இருக்கிறார்.. சங்கீதா க்ரிஷ் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்..!

நமக்காக ஒருத்தர் அடியெல்லாம் வாங்குறாரே என்று அதன்பின்னர்தான் ராமராஜன் மீது அவருக்குக் காதல் ஏற்பட்டிருக்கிறது. இப்படியெல்லாம் நடந்துகொண்ட தனது குடும்பத்தினரைப் பழிவாங்க வேண்டும் என்கிற எண்ணத்தில் ராமராஜனை வீட்டை விட்டு வெளியே வந்து நளினி திருமணம் செய்துகொண்டார்.

இந்த ஜோடி சில பல தவிர்க்க முடியாத காரணங்களால் கடந்த 2000-ம் ஆண்டு விவாகரத்து செய்துகொண்டது. ஆனாலும், ராமராஜன் மீது தனக்கு இருந்த காதலும் மரியாதையும் என்றும் குறைந்ததில்லை என நளினி பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார்.

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily